நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 27 நவம்பர், 2011

சமுதாய சொந்தங்களே…!

சமுதாய சொந்தங்களே…!

அஸ்ஸலாமு அலைக்கும்….

800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட சமுதாயம் தன்னுடைய வரலாறு தெரியாமல் வாழ்ந்து வருகிறது.

ஆங்கிலேயர்களை விரட்டி அடித்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம்.

ஆனால் இன்று அவை மறைக்கப்படுகிறது.

அதுமட்டும் அல்ல உலகிற்கு நன்மை செய்யும் முஸ்லிம்கள் பற்றியும் மறைக்கப்படுகிறது.

இதற்கு அடிப்படை காரணம் முஸ்லிம்களாகிய நாம் கூர்மை கொண்ட பத்திரிக்கை துறையில் இல்லாத ஒன்று தான்.

பத்திரிக்கை துறையில் நாம் இருந்தால், உண்மை செய்திகளை கொண்டு, நமது சமுதாய எழுச்சிக்கு வித்திடலாம்.

சுதந்திர தினத்தில் மருதநாயகம், திப்பு சுல்தான் போன்றவர்கள் வரலாற்றை கூறலாம்.

ஆவணப்படம் எடுத்து, இன்று முஸ்லிம்கள், உலக அரங்கில் படக்கூடிய கஷ்டங்களை சொல்லலாம்.

செய்யாத தவறுக்காக பல ஆண்டுகள் சிறையில் வாடும் முஸ்லிம்கள் பற்றியும், அவர்கள் குடும்பம் படும் இன்னல்கள் பற்றியும் எடுத்து சொல்லக்கூடிய கூர்மை ஆயுதம், இந்த காட்சி ஊடகமான பத்திரிக்கை துறை.


இன்று அந்த துறையில் இல்லாததன் விளைவு, முஸ்லிம்களுக்கு பத்திரிகைகள் பெயர் வைத்து இருப்பது தான் “தீவிரவாதிகள்”, “பயங்கரவாதிகள்”.

இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஆதரிக்காத மார்க்கம்.

இந்த முஸ்லிம்கள் “தீவிரவாதிகள்” என்ற விஷபெயர் பத்திரிக்கை துறையில் மாற்றப்படவேண்டும்.

அதற்கு முஸ்லிம்களாகிய நாம் பத்திரிக்கை துறையில் சேர வேண்டும்.

இந்த துறைக்கு செல்வதற்கு நிச்சயம் நாம் அந்த துறைக்கு தேவையான படிப்புகள் படிக்க வேண்டும்.

இந்த படிப்புகள் இப்பொழுது மத்திய அரசால் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கப்படுகிறது.

ஒரு மாத பயிற்சியான இந்த படிப்பிற்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நேர் முகதேர்வு நடைபெறுகிறது.

மேலும் விபரங்களுக்கு:

NATIONAL FILM DEVELOPMENT CORPORATION,
CHENNAI.
044-28192506
044-28192407
044-28191427