புதுடெல்லி: அரசியலில் சக்திப் பெறுவதன் மூலமாகவே முஸ்லிம்களுக்கு சமூக நீதி கிடைக்கும் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் ஸாஹிப் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர். டெல்லி மிகவும் தொலைவில் உள்ளது என முன்பு ஒரு முகலாய மன்னர் கூறியது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பாப்புலர் ஃப்ரண்டிற்கு டெல்லி அருகிலேயே உள்ளது என அவர் கூறினார்.
இந்தியாவில் 25 சதவீத சொத்துக்களை 100 பேர் கைவசம் வைத்திருக்கும் சூழல் நிலவுவதாக லோக் ஜன சக்தி பொதுச்செயலாளர் அப்துல் காலிக் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
70-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குஜராத் ஸபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அப்துல் காலிக் கூறினார்.