நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 2 டிசம்பர், 2011

சமூக நீதி மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது! அல்ஹம்துலில்லாஹ்!

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாடு நேற்று காலை சரியாக 9:30 மணி அளவில் கொடியேற்றத்துடன் எழுச்சியோடு தொடங்கியது.  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் இயக்கத்தின் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக்கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கிவைத்தார். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்த கொடியேற்ற நிகழ்ச்சியோடு சமூக நீதி மாநாடு இனிதே தொடங்கியது.



ராம்லீலா மைதானத்தில் தொடங்கிய இந்த சமூக் நீதி மாநாடு மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவும், சுதந்திரம், நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் தேசத்தை நீதியால் கட்டமைப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இது போன்ற மாபெரு பிரச்சாரங்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினால் நடத்தப்படுகிறது.


வலிமையை நோக்கி: கருத்தரங்கம்


மாநாட்டின் முதல் நாள் காலை 10.00 மணி அளவில் "வலிமையை நோக்கி" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஃபதஹ்புரி மஸ்ஜிதின் தலைமை இமாம் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கிவைத்தார். இந்திய அரசியல் அமைப்பு விதியின் படி எல்லா மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சிறுபான்மை மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இத்தகை அடிப்படை உரிமைகளிலிருந்து தவிர்க்கப்பட்டு வருகிறார்கள். தேசப்பிதா காந்தியடிகள் கூறும் போது இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபாவாக திகழ்ந்த ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியைப்போன்று இந்தியாவில் ஆட்சி செய்யப்படவேண்டும் என்று விரும்பியதாக இமாம் அவர்கள் கூறினார்.


பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் தலைமை உரையாற்றும் போது " இந்தியாவில் முஸ்லிம்களை அனைத்து கட்சிகளும் ஓட்டு வங்கியாகவே பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு அரசியல் கட்சியும் முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை" என்று கூறினார்.


சென்ற காலங்களில் இந்தியாவின் கலாச்சாரம் அதன் வளம் ஆகியவற்றை பலப்படுத்தி நிர்வாகம் செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள் தற்போது பாகுபாடுக்குள்ளாக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக பிறரை குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் தங்களுடைய வரலாற்றை நன்கு உணர்ந்து கொண்டு இந்திய அரசியலில் சக்திமிக்க ஒரு சமுதாயமாய மாறுவதற்குண்டான வேலைகளில் ஈடுபடவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐயின்  தேசிய பொதுச்செயலாளர் ஏ.செய்யது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

டாக்டர் அர்ஷி கான் அவர்கள் கூறும்போது பிளேட்டோ மற்று அரிஸ்டாட்டில் போன்றவர்களின் கூற்றை முன்வைத்து உரை நிகழ்த்தினார். நீதியை நிலை நாட்டுவதே ஒரு தேசத்தின் லட்சியமாக இருக்க வேண்டும். மற்ற நாடுகளின் சட்டத்திட்டங்களை காட்டிலும் நமது நாட்டில் உள்ள சட்டங்கள்தான் சிறந்தவை, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் நாம் மிக மோசமான ஆட்சியாளர்களை கொண்டிருக்கின்றோம். இரட்டை நீதி நிலை நமது நாட்டில் பரவலாக காணப்பட்டுவருகிறது. ஆட்சியாளர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட வாக்குறுதியின் படி செயல்பட்டு எல்லா மக்களுக்கும் சமமான நீதி வழங்கிட வேண்டும். அவ்வாறு நடந்து கொண்டால் தான் நமது தேசத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற வகுப்புவாதம் மற்றும் வகுப்புவாத கலவரங்கள் போன்றவை நிகழாமல் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும்" இவ்வாறு டாக்டர் அர்ஷி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

உச்ச  நீதிமன்றத்தின் வழக்கறிஞர் பாஹர் புரூக்கி "நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றும்போது சிறுபான்மை மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். இதற்கு காரணம் சம நீதி என்பது செயல்பாட்டில் இல்லாததினால் தான். எனவே நீதித்துறை உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து அனைத்து மக்களுக்கும் சமமான நீதியை வழங்கிட வேண்டும்" என்று கூறினார்.

எஸ்.டி.பி.ஐயின் பொதுச்செயலாளர் ஹஃபீஸ் மன்சூர் அலி கான் உரையாற்றும் போது " முஸ்லிம் சமூகம் தங்களது அரசியல் பல்வீனத்தை களையவேண்டிய தருணம் இது. வேண்டுமென்றே முஸ்லிம்களை பிற அரசியல் கட்சிகள் தவிர்த்து வருகிறது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கூட முஸ்லிம்களை போட்டியிடவிடுவதில்லை. முஸ்லிம் சமுதாய தனது உள்கட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான செயல்களை துரிதப்படுத்த வேண்டும். என்று கூறினார்.



ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் பொதுச்செயலாளர் மெளலானா சித்தீகி உரை நிகழ்த்தும் போது "எந்த ஒரு சமுதாயம் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளாதவரை அந்த சமூகத்தை இறைவன் மாற்றப்போவதில்லை" என்ற இறைவசனத்தை எடுத்துக்கூறினார். முஸ்லிம்கள் தங்களுடைய இடத்தை அறிந்து கொண்டு அதில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மார்க்க அறிஞர்களும் தங்களால ஆன சமூகப் பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

"முஸ்லிம் பெண்களை வலிமைப்படுத்தவேண்டும்"  என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐயின் துணைத்தலைவர் பேராசிரியர் நாஜினின் பேகம், "பொருளாதார ஏற்றத்தாழ்வு" என்ற தலைப்பில் மில்லிகஜட் நாளிதழின் ஆசிரியர் ஜஃபருல் இஸ்லாம் கான், "முஸ்லிம்களின் ஒற்றுமைக்கான கருவிகள்" என்ற தலைப்பில் சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் கமால் ஃபரூகி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரக்கத்தின் போது கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும்.

2. பாபரி மஸ்ஜித் இருந்த அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டு, அதனை இடித்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

3. வக்ஃப் சொத்துக்கள் முறையாக கண்டெடுக்கப்பட்ட அதனை பராமரிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


4. குல்பர்காவில் நடைபெற்ற கல்வரத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட‌ வேண்டும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில ஒருங்கிணைப்பாளர் மெளலானா கலீமுல்லாஹ் அவர்கள்   வரவேற்புரை நிகழ்த்தினார்கள். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் மெளலானா முஹம்மது காலித் ரஷாதி நன்றியுரை நிகழ்த்தினார்.