நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 2 டிசம்பர், 2011

சமூக நீதி மாநாடு - மாபெரும் பொதுக்கூட்டம் தொடங்கியது

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட மாபெரும் பொதுக்கூட்டம் தொடங்கியது. மதியம் 12:30 மணி அளவில் லுஹர் மற்றும் அஸர் தொழுகைகள் ஜம்மு கஸராக தொழுது முடித்த பின் சரியாக 1:00 மணி அளவில் பொதுக்கூட்டம் தொடங்கியது. தேசிய ஒற்றுமை கீதமான "ஸாரே ஜஹான்ஸே அச்சா!" பாடலுடன் தொடங்கிய இப்பொதுக்கூட்டத்திற்கு தேசத்தின் பல பகுதிகளிலிருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தேசியத்தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் துவக்க உரை நிகழ்த்தினார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அழைப்பை சமாஜ் வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சரியாக 4:30 மணி அளவில் பொதுக்கூட்டம் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு செய்தித்தொகுப்பு பின்னர் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்!