புதுடெல்லி: முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமங்கள் குஜராத்தில் அனைத்து வரம்புகளையும் மீறி வருகின்றன என பதேஹ்பூரி இமாம் முஹம்மது முகர்ரம் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.
முஸ்லிம்கள் அதிகமாக பொய்யான தீவிரவாத வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மோடிக்கு அஞ்சும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் வாக்கு சேகரிக்க வரக்கூடாது. மோடிக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள்தாம் முஸ்லிம்களுக்கு தேவை என இமாம் கூறினார்.
இஷ்ரத் ஜஹான் உள்பட நான்குபேரை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்ததற்கு மோடியை சிறையில் அடைக்கவேண்டும் என ராஷ்ட்ரீய ஸஹாரா முதன்மை எடிட்டர் அஸீஸ் பர்ணி தனது உரையில் கோரிக்கை விடுத்தார்.