நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 26 நவம்பர், 2011

நீதியின் மறுபக்கம் - சமூக நீதி மாநாட்டிற்கான கவிதை




சமூக நீதியைப் பெற‌
துடித்தெழும் எம் மக்களின்
குரல்வலையை நெறிக்குது
ஒரு குள்ள நரிக் கூட்டம்....

நீதியின் மறுபக்கத்தை 
புரட்டினால் அது பாப்புலர் ஃப்ரண்ட்
அநீதியின் அத்துனை பக்கங்களும்
ஆர்.எஸ்.எஸ் ஆல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது...

நாஜிக் கொள்கையின்
கள்ளக் குழந்தைகள்
பரிணாம வளர்ச்சி பெற்று
மாஜிகளாய் மத்தியிலிருந்து
எம் தேசத்தை கூறுபோட கூக்குரளிடுகிறது...
இந்த கொலைவெறிக் கூட்டம்...

எங்கும் பசி! பயம்!
வயிற்றிலும், கண்ணிலும்
ஏந்தியவாறு எம் அப்பாவி மக்கள்
நீதி! கிடைக்காதா? என ஏங்கும்
அறியாத மக்கள்....

சுதந்திரம்? நீதி? பாதுகாப்பு?
கேள்வி குறிகளாய்....
அப்பாவி தலித்களும், முஸ்லிம்களையும்
களையும் (பணியில்) காவல்துறை...

சுதந்திரத்தை கொண்டாட‌
சுதந்திரமில்லையாம்
ஆளும் வர்க்கத்தின்
அதிகார துஷ்பிரயோகம்...
அப்பாவி மக்களுக்கு செய்யும் துரோகமல்லவா...?

நீதியை பெற
நீதிமன்றங்களை நாடினால்
நாதியற்று வீதியில் விழும் அவலம்...


அந்தோ
எஜமானன் எமனாய் காட்சியளிக்கிறான்..!
எளியவர்களின்
வரியில் வாழும்
நயவஞ்சக ஓநாய்கள்
அந்நியர்களுக்கு
சிவப்பு கம்பளம் விரிக்கின்றனர்.

சுதந்திரத்திற்காக 
உயிரை இழந்தோம்...
பொருளை இழந்தோம்...
கல்வியை இழந்தோம்...
கண்ணியத் தலைவர்களால்
அந்நியர்களை விரட்டியடிக்க...!
நிராயுதபாணியாய் நின்றதனால்
தேசத்தில் நாம் தீவிரவாதியானோம்....

சூலாயுதத்தையும், வேலாயுதத்தையும்
கையிலேந்தி கண்ணில் கொலைவெறியோடு
அப்பாவி மக்களை அச்சுறுத்துபவனெல்லாம்
தேசியவாதியாம்....!

இனியொரு விதி செய்வோம்
தலைவிதியை மாற்ற‌
தலைநகர் நோக்கி புறப்படுவோம்...

தடுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட‌
உரிமைகளை பெற்றுத் தர‌
துடிக்கிறது பி.எஃப்.ஐ...

ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட‌
மக்களை ஓரணியாய் திரட்டி
குற்றப்பரம்பரை எனும் கரைகளை நீக்கி
அள்ளும் பகலும் அயராது உழைத்திட‌
விடியலின் குழுமம்
உங்களை அன்புடன் அழைக்கிறது...

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்
வீட்டில் உள்ள அனைவரையும் பாப்புலர் ஃப்ரண்டில் இணைப்போம்!
முன்னோர்கள் கண்ட கனவை நனவாக்குவோம்!
இன்ஷா அல்லாஹ்!