சூரத்கல் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநிலம் சார்பாக சூரத்கள் கிருஷ்ணபுராவில் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரமாக ஞாயிற்றுகிழமை 20.11.2011 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
இன்ஃபர்மேஷன் அன்டு எம்பவரிங் சென்டர் அமைப்பின் தலைவர் அன்வர் சாதாத் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் உரையாற்றும்போது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னால் நமது நாட்டை
ஆண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சிறுபான்மை மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர். உயர் ஜாதியினரே இது நாள் வரை நமது தேசத்தை ஆண்டு கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.
இந்துக்கள் வலிமையடைய வேண்டும் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். பிரம்மணிச கொள்கையை பரப்பி வருகிறது. தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் இணைந்து மண்டல் கமிஷணின் அறிக்கையை அமுல்படுத்தக்கோரி நடத்திய போராட்டங்களினால் வி.பி.சிங் சிறிது காலம் பிரதமராக இருந்தார். ஆனால் இதை எல்.கே. அத்வானி தனது ரதயாத்திரை மூலமாக திசை திருப்பினார்.
நமது நாடு விடுதலை அடைந்தது என்றால் அதற்கு காரணம் முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்றினைந்து போராடியதனால் தான். ஆனால் இந்த ஆர்.எஸ்.எஸ். இந்திய சுதந்திரப்போரில் பங்கெடுத்ததே இல்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் இரண்டாம் தலைவரும் குருஜி என்று அழைக்கப்படுபவருமான "கோல்வால்கர்" தனது புத்தகத்தில் கூறும்போது "இந்துக்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கெடுக்கக்கூடாது. வெள்ளையர்கள் நமக்கு எதிரிகள் அல்ல.முஸ்லிம்கள் தான் நம்முடைய உண்மையான எதிரிகள். எனவே இந்துக்கள் தங்களது பலத்தை முஸ்லிம்களுக்கு எதிராக உபயோகப்படுத்துவதற்கு தயாராக வேண்டும்." என்று எழுதியுள்ளதாக அன்வர் சாதாத் தெரிவித்தார்.
கின்னிங்க்கோலி, கோலநாடு, கமது, ஹேலங்காடி மற்றும் சூரத்கல் சந்திப்பு ஆகிய இடங்களில் தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மங்களூர் மாவட்ட தலைவர் முஹம்மது ஷரீஃப் வரவேற்று துவக்க உரை நிகழ்த்தினார். சகோதரர் சமீர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். சகோதரர் ஏ.கே.அஷ்ரஃப் அவர்கள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்தார். ஆண்கள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.