நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 21 நவம்பர், 2011

மும்பை தாக்குதல்:3-ஆம் ஆண்டு நிறைவு – ஹெட்லி இன்னமும் விசாரிக்கப்படவில்லை

mumbai-attack4_630
மும்பை:மும்பை தாக்குதல் நடைபெற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இச்சம்பவத்திற்கு முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் டேவிட் கோல்மான் ஹெட்லியை விசாரணை செய்ய மும்பை போலீசாரால் இயலவில்லை.

ஹெட்லியையும், தஹாவூர் ராணாவையும் விசாரணை செய்ய அமெரிக்காவின் பதிலுக்காக மும்பை போலீஸ் காத்திருக்கிறது. இவர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரும் தூதரக ரீதியான கடிதத்திற்கு இதுவரை அமெரிக்க நீதிமன்றம் பதிலளிக்கவில்லை.
அக்டோபர் மாதம் மெட்ரோபாலிடன் நீதிமன்றம் அமெரிக்க நீதிமன்றத்திற்கு கடிதத்தை அனுப்பியிருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) ஹெட்லி மற்றும் ராணா ஆகியோரிடம் விசாரணையை நடத்தியிருந்தது. சட்ட உதவி கிடைப்பதற்காக ஒரு நாட்டின் நீதிமன்றம் இன்னொரு நாட்டின் நீதிமன்றத்திற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்புவது உண்டு. சிக்காகோ நீதிமன்றத்திற்குத்தான் இந்திய நீதிமன்றம் கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை என துணை கமிஷனர்(க்ரைம்) ஹிமாம்ஷு ராய் கூறுகிறார்.
ஹெட்லி மற்றும் ராணாவை விசாரித்தால் மும்பை தாக்குதலில் இவர்களின் தொடர்புகளை குறித்து கண்டுபிடிக்க இயலும் என அவர் கூறியுள்ளார்.
லோக்நாத் பெஹ்ராவின் தலைமையிலான என்.ஐ.ஏவின் நான்கு உறுப்பினர்களை கொண்ட குழு ஹெட்லியிடம் விசாரணை நடத்தியிருந்தது. விசாரணையின் ரகசியத்தை பாதுகாப்பதற்காக அதன் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.