நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 20 நவம்பர், 2011

விலைவாசி உயர்வை திரும்பப்பெறவேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

தொடர்ந்து ஏறிவரும் பெட்ரோல் விலை அதன் எதிரொலியாக ஏற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எப்படி சமாளிப்பது என மக்கள் திக்குமுக்காடி கொண்டிருக்கும் வேளையில் மக்களின் தினசரி தேவைகளான பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருப்பது 
பகிரங்கமான மக்கள் விரோத மனிதாபிமானமற்ற செயலாகும்.



இந்த விலை உயர்வினால் வழக்கம் போல் பாதிப்பிற்குள்ளாகப் போவது நடுத்தர மக்கள்தான். ஆடு வழங்குகிறேன், மாடு வழங்குகிறேன் என்று சொல்லி விட்டு மனிதனின் அன்றாடத் தேவைகளை பன்மடங்கு உயர்த்தியிருப்பது "யானைக்கும் பானைக்கும் சரியாப் போச்சு" என்பது போன்று உள்ளது.

ஏற்கனவே மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்துடன் இப்போதைய கட்டண உயர்வு, பால்விலை உயர்வு மற்றும் உயரவிருக்கும் மின் கட்டணம் என பொதுமக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வுகளை வன்மையாக கண்டிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் உடனே இந்த விலை உயர்வை திரும்பப் பெறவேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது