நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 20 நவம்பர், 2011

இஸ்லாமிய பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நேற்றைய தினம் 18.11.2011 அன்று சென்னை மண்ணடியிலுள்ள மாநில தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது. முதன்முறையாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஒரு சில பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இஸ்லாமிய பத்திரிக்கையாளர்களை அழைத்து இனி வரும் காலங்களில் இயக்கத்தின் செய்திகளை தெரிவிப்பது என்ற அடிப்படையில் முதன் முறையாக பத்திரிக்கையாளர்களை அழைத்து ஒரு சிறிய கருத்துரையாடலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் மற்றும் மாநில துணைத்தலைவரும் "விடியல் வெள்ளி" மாத இதழின் ஆசிரியருமான முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் இன்றைய இந்தியாவில் முஸ்லிம்களின் நிலையை பற்றி விரிவாக எடுத்துக்க்கூறி, இந்த சமூகம் நீதித்துறையில் எந்தளவிற்கு பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளது என்பதை விளக்கினார். இத்தகை காலச்சூழ்நிலையில்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசத்தின் தலைநகரமான புதுடெல்லியில் "சமூக நீதி மாநாட்டை" நடத்த இருக்கிறது என்றும் மாநாட்டிற்கான‌ நோக்கத்தையும் அதன் லட்சியத்தையும் எடுத்துக் கூறினார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாநில தலைவரும், துணைத்தலைவரும் பதில் அளித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பச்சை ரோஜா, அல்ஹிந்த், முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம், மற்றும் பீஸ் ஆஃப் வாய்ஸ்  போன்ற பத்திரிக்கயைச்சேர்ந்த நிருபர்கள் கலந்து கொண்டனர்.