நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 18 நவம்பர், 2011

சமூக நீதிக்காக ராஜஸ்தான் மாநிலமும் தயார்!


கோட்டா: ராஜஸ்தான் மாநில பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக "சமூக நீதி மாநாட்டிற்கான" பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

வருகின்ற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக புதுடெல்லியில் நடக்க இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்று தற்போது முடியும் தருவாயில் இருக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் சமூக நீதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள், சுவரோட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலாமாக பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் பாலைவனம் அமைந்திருக்கின்ற  மாநிலமான ராஜஸ்தானிலும் பிரச்சாரம் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷாஃபி உரையாற்றும்பொழுது "அரசாங்கம் முஸ்லிம் சமூகத்திற்கு மாபெரும் அநீதி இழைத்து வருகிறது. தலித் மற்றும் ஆதிவாசி சமூகத்தாரின் நிலையும் இவ்வாறே இருக்கிறது. இச்சமயத்தில் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற கோஷத்தை முன்வைத்து சமூக நீதி மாநாட்டை நடத்த இருக்கிறது என்றார்.

சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Rajasthan SJC 
Rajasthan SJC