கொல்கத்தா : மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள் எனவும் அவர்களின் செயல்களை அரசு கைக்கட்டி பார்த்துக் கொண்டு இருக்காது என மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவோயிஸ்டுகள் அண்மையில் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக மம்தா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மாவோயிஸ்டுகள் சமாதானத்தை குறித்து பேசமாட்டார்கள். ஆட்களை கொலைச் செய்து வருகிறார்கள் என மம்தா குற்றம் சாட்டினார்.