நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 16 நவம்பர், 2011

அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தால் நீதித்துறையில் பயங்கராவதம் இருப்பதாக‌ அர்த்தம்!


மங்களூர் : பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளியாக்கப்பட்டு அநீதியான முறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினால் நீதித்துறையில் பயங்கரவாதம் ஊடுறுவிட்டதாக அர்த்தம் என கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.பாலன் தெரிவித்துள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "கறுப்புச் சட்டங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றி பாலன் மேற்கூறியவாறு தெரிவித்தார்.

Advocate S.Balan
அஃப்சல் குரு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டார், சமூக விரோத பேச்சுகளை பேசினார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இருந்த போதிலும் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளார் அஃப்சல் குரு. தனக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு வழக்கறிஞரை நியமிப்பதற்குக்கூட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பாக வாதாடிய அரசு வழக்கறிஞர் எதிர் தரப்பு வழக்கறிஞரிடம் எதிர் கேள்வி கூட கேட்டதில்லை. ஆனால் அஃப்சல் குருவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தடா சட்டமும் இத்தகையை தண்டனையைத்தான் நிர்ணயித்துள்ளது. ஆங்கிலேயர்களால் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை தடுப்பதற்காக ஏற்படுத்திய கடுமையான சட்டமான தடா சட்டம் இன்றும் நமது நாட்டில் இருந்துவருவதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


Advocate Balan
சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய வி.டி இராஜசேகர் கூறும் போது, நமது நாட்டில் வெறும் 15% மட்டுமே இருக்கக்கூடிய உயர் ஜாதியினர் நம் நாட்டின் அனைத்து வளங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். சமூக நீதிக்காக உறுதியாக போராடிய ஒருவர் உண்டு என்றால் அது அம்பேத்கர் தான் என்று கூறினார்.


Athradi Amrutha Rao

V.T.Rajashekhar


Elyas Bhai
.
Elyas Bhai