ராமல்லா : புதிய நல்லிணக்க பேச்சுவார்த்தைகளுக்கு ஃபலஸ்தீன் ஆணைய தலைவர் மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் வருகிற நவம்பர் 27-ஆம் தேதி கெய்ரோவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
2007-ஆம் ஆண்டு ஹமாஸ்-ஃபத்ஹ் உறுப்பினர்கள் வீதிகளில் மோதியதைத் தொடர்ந்து ஃபலஸ்தீனில் இரு தரப்பினரிடையே பகைமை ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே மாதம் ஃபத்ஹ்-ஹமாஸ் இயக்கங்கள் நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.