நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 14 நவம்பர், 2011

முஸ்லிம்களுக்கு மட்டும் குற்றம் செய்யாமலேயே சிறைச்சாலையா?

மாலேகான் :  கடந்த 2006ஆம் ஆண்டு மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது கைது செய்யப்பட்ட 9 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 6ஆம் தேதி அன்று நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு சபே-பராத் இரவு அன்று மாலேகானில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 30ற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். மஹாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு 9 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தனர். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு ஆதாரமும் இல்லாதிருந்தும் தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


முஸ்லிம் இளைஞர்கள் எப்படி தங்களுடைய உறவினர்களையும் தன் சமூக மக்களையும் குண்டு வைத்து கொல்வார்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் காவல் துறையினரிடம் கேள்வி எழுப்பினர். கடந்த சில வருடங்களாக முஸ்லிம் சமூகத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களும் இஸ்லாமோஃபோபியா என்ற கிருமியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றே சொல்லலாம். தற்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு மிக இலகுவாக ஆகிவிட்டது. எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அந்த குண்டுவெடிப்பில் யார் உயிரிழந்தாலும் முதலில் சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு பின்னர் அவர்களுக்கு எதிராக போலீயான ஆதாரங்களை திரட்டுவது போன்ற அக்கிரமமான வேலையைத்தான் காவல்துறையினர் சில காலமாக செய்து வருகிறார்கள்.



இதே போன்ற நிலைதான் ஹைதரபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் போதும் நிகழ்ந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நேரத்தின் போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில பல அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு உடனே 27 முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தின் விசாரணைக்கூட நேர்மையாக நடைபெறவில்லை. இரயில் எரிப்பு சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்ட மெளலானா ஹாஜி உமர் அவர்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இதுவரை சமர்பிக்கப்படவில்லை என்ற போதிலும் சில முஸ்லிம் இளைஞர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை அதிகாரிகள் தாங்கள் ஏற்றுக்கொண்ட பதிவிக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.


கடந்த 2006ஆம் ஆண்டு நந்தித்தில் பஜ்ரங்தளைச்சேர்ந்த இரு தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ். ஊழியனான ராஜ்கொந்தவார் என்பவனின் வீட்டில் வைத்து வெடிகுண்டு தயாரிக்கும்போது வெடித்துச்சிதறி பலியானார்கள். இத்தகைய செயலில் ஈடுபட்டது இந்துத்துவ இயக்கங்களைச்சார்ந்தவர்கள் தான் என்று தெளிவாக தெரிந்திருந்த பின்னரும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் நேர்மையாக நடந்து கொண்ட ஹேம்ந்த் கர்கரே என்ற காவல்துறை அதிகாரி புலன் விசாரணையில் ஈடுபட்டு மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்தார். ஆர்.எஸ்.எஸ்-ன் பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், சுவாமி தயானந்த பாண்டே, முன்னால் இராணுவ அதிகாரி என பல ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை கைது செய்தார். ஆனால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட மும்பை தாக்குதலின் போது ஹேமந்த் கர்கரே படுகொலை செய்யப்பட்டார்.

இது நாள் வரை நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதனால் உண்மை குற்றவாளிகள் சுதந்திரமாக திரிந்து கொண்டு தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பினும் அவர்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலிருந்து என்றோ விலகிவிட்டார்கள் என்றும் அவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்-ற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைமை மறுத்துவருகிறது. குண்டுவெடிப்பிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று என்னதான் ஆர்.எஸ்.எஸ் கூவினாலும் அசிமானந்தாவின் வாக்குமூலம் அவர்களுக்கு செருப்படியாய் விழுந்திருக்கிறது. அசிமானந்தாவ் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர ஊழியன் என்றும், வி.ஹெச்.பி.காக பல ஆண்டுகளாக பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்ற உண்மையை அவர்களால் மறைக்கமுடியவில்லை. தாமே மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் இன்ன பிற சம்பங்களிலும் ஈடுபட்டதாக நீதிபதியிடமே வாக்குமூலம் அளித்தார் அசிமானந்தா. இன்னும் சில ஆர்.எஸ்.எஸ்-ன் ஊழியர்களையும் காட்டிக்கொடுத்தார்.


ஒரு குற்றமும் செய்யாமல் கிட்டத்தட்ட 6 வருடங்களாக சிறையில் தனது இளமையை துலைத்துவிட்டு தற்போது ஜாமீனில் வெளியாகியிருக்கும் அந்த 9 முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை நிலை என்னவாகும்?

தொடர்ந்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் இந்துத்துவ தீவிரவாதிகள் தான் ஈடுபட்டுவருகிறார்கல் என்பது தெளிவாக தெரிந்திருந்த பின்னரும் எங்கு குண்டுவெடித்தாலும் முஸ்லிம் இளைஞர்களையே குறி வைத்து கைது செய்வது சரியான் முறைதானா? 


எப்போது இத்தகைய நிலை மாறும்? 


சமூக நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்று அரசு வெறும் வாய்ஜாலத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இதற்காக எத்துனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது? வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கக்கூடிய "சமூக நல்லிணக்கம்"  என்று செயல்வடிவம் பெறும்?


தாங்கள் ஈடுபட்டு வரும் இந்த ஒரு தலைபட்சமான செயல்பாடுகளினால் உண்மை குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டே வருகிறார்கள். இதனால் தேசத்திற்கே ஆபத்து என்பதை எப்போது இந்த காவல்துறை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள்போகிறார்கள்?

மதத்தின் பெயரால் அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் அட்டூழியங்களை முடக்கப்போவது யார்?

இத்தகைய கேள்விகளுக்கு யாரிடத்தில் பதில் இருக்கிறது.....