மும்பை : 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பை முஸ்லிம் வேடத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நந்தித் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து முஸ்லிம்கள் அணியும் ஆடையும், தொப்பியும், போலி தாடியும் கண்டுபிடிக்கப்பட்டன.
குண்டுவெடிப்பின் பின்னணியில் முஸ்லிம்கள் செயல்பட்டுள்ளார்கள் என நம்பவைப்பதற்கான
ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் திட்டம் என்பது தெளிவானது. மலேகான் குண்டுவெடிப்பிற்கு பிறகு இறந்த உடல்களை அகற்றும் வேளையில் போலியான தாடி அணிந்த ஒரு இறந்த உடலை கண்டது குறித்து மில்லி கெஸட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. உடனடியாகவே இந்த உடலை போலீஸ் நாஸிக்கிற்கு அனுப்பியது. ஆனால், மறுநாள் அப்படியொரு சம்பவம் நிகழவில்லை என செய்தி வெளியானது.2006 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் என்ற உருது பத்திரிகையும், செப்டம்பர் 11-ஆம் தேதி மும்பையிலிருந்து வெளியாகும் இன்குலாப் என்ற பத்திரிகையும் இதே செய்தியை வெளியிட்டிருந்ததாக என மில்லிகெஸட் மேற்கோள்காட்டியது.
நந்தித், மலேகான் குண்டுவெடிப்புகளுக்கு இடையே ஏராளமான ஒற்றுமைகளை புலனாய்வு ஏஜன்சிகள் கண்டுபிடித்த போதிலும் இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்ய அவர்களால் இயலவில்லை. அதேவேளையில், இவ்வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அஸிமானந்தா முஸ்லிம்களுக்கு எதிராக பகை உணர்வை வளர்த்துவதில் தான் பங்கு வகித்ததாக புலனாய்வு ஏஜன்சியிடம் தெரிவித்திருந்தார்.
நந்தித் குண்டுவெடிப்பில் குற்றவாளியான மனோகர் ராவு முஸ்லிம் வேடமணிந்து தொப்பியும், தாடியும் வைத்ததாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். குண்டுவெடிப்பின் குற்றத்தை முஸ்லிம்களின் மீது சாட்டவும், புலனாய்வு அதிகாரிகளை திசை திருப்பவும் இவ்வாறு முஸ்லிம் வேடமிட்டதாக மனோஹர் ராவு கூறியிருந்தான். இதற்காக முஸ்லிம் பெயர்களில் போலி இ-மெயில் முகவரிகளை உருவாக்கியுள்ளனர்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சூழல் விபர அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய புலனாய்வு ஏஜன்சி முயன்ற போதிலும் அது அவ்வளவு எளிதானது அல்ல என கருதப்படுகிறது.