கோவா : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் கோவாவில் நடைபெற்றது. லோஹியா மைதானத்தில் நடைபெற்ற இப்பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் அவர்கள் உரை நிகழ்த்தும் போது "இந்த பிரச்சாரம் கோவா மக்களிடையே சமூக நீதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது." என்று கூறி அனைத்து மக்களும் ராம்லீலா மைதானத்தில் சங்கமிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டார். சமூக நீதிக்காக போராட நாம் தயாராக வேண்டும் அதற்கான சரியான தருணம் தான் இது. இன்று நாம் இந்த போராட்டத்தை துவங்கவில்லை என்றால் நம்முடைய சந்ததிகளுக்கும் சமூக நீதி கிடைகாத நிலை ஏற்பட்டுவிடும் என்று கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில துணைத்தலைவர் அப்துல் வாஹித் சேட் உரையாற்றும்போது "முஸ்லிம் சமூகத்திற்கு சமூக, ஜனநாயக மற்றும் குடியுரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனைகளை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. எனக்கூறினார். பல்வேறு சமூக ஆர்வளர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.