நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா (SDPI) கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் வழிகாட்டுதல் முகாம் இன்று (17-11-2011) காலை 11 மணிக்கு மதுரை C.M.N மன்றத்தில் SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.SDPI மாநில பொருளாளர் அம்சத் பாஷா முன்னிலை வகித்தார்,மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீத் வரவேற்றார் .SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி அவர்கள் தேர்தல் நடை முறைகள் பற்றியும்,அதில் நடந்த முறைகேடுகள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் A.S இஸ்மாயில்,மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் ஷெரிப் ,SDPI தேசிய செயலாளர் Dr.ஆவாத் ஷெரிப் ,மாநில பொது செயலாளர் S.M முஹம்மத் ரபீக் வாழ்த்துரை வழங்கினர்.விருது நகர் முன்னால் BDO முஹம்மத் பிச்சை மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளாட்சியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும்,உள்ளாட்சி அதிகாரம் பற்றியும் வகுப்பு எடுத்தனர் .இறுதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க பட்டு மாநில செயலாளர் நெல்லை முபாரக்கின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .