நீதியின் மீது தேசத்தை கட்டமைப்போம்' என்கிற முழக்கத்தோடு நவம்பர் 26, 27 நாட்களில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் வைத்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருவது போல, இந்தியர்கள் வசிக்கும் வெளிநாடுகளிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளிலும் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்த பிரச்சாரத்தை செய்து வரும் குழுவின் சார்பாக சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்ச்pகளும், கருத்தரங்கங்களும், கலந்துரையாடல்களும் பல்வேறு மொழிகளில் நடந்து வருகிறது.
தமிழ் மக்களிடையே மாநாட்டின் தேவையையும், குறிக்கோளையும் உணர்த்தும் கையேடுகளும்,சிடிக்களும் அதிகம் அதிகம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் தமிழ் மக்களுக்காக நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து தம்மாமில் செயல்படும் பல்வேறு இயக்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், ஜமாஅத் நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அவர்களிடம் சமூக நீதி மாநாட்டின் செய்திகளை பகிர்ந்து கொள்வது மற்றும் நல்ல ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளவது என்கிற அடிப்படையில் பிரச்சாரக் குழு தீர்மானித்தது.
அதன் அடிப்படையில், தம்மாம் ரோஸ் ரெஸ்டாரண்ட் அரங்கில் வைத்து 18 நவம்பர் 2011 அன்றுநடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு அனைவருக்கும் சமுதாயத் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு நேரிடையாக் சென்று கொடுக்கப்பட்டது.
இறைவனின் மாபெரும் கிருபையால் அவர்கள் நமது அழைப்பை ஏற்று கலந்து கொண்டார்கள். சிறப்பான கலந்துரையாடலையும் மேற்கொண்டார்கள்.
தமுமுக கிழக்கு மாகாண நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், ஜம்அத்தே இஸ்லாமி நிர்வாகிகள், ஜாக்அமைப்பின் நிர்வாகிகள், பல்வேறு ஊர் ஜமாஅத் பொறுப்புதாரிகள், சமூக சேவை ஆர்வலர்கள், ததஜ சகோதரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
குறிப்பிட்ட படி மாலை 7:30 மணிக்கு சரியாக நிகழ்ச்சி தொடங்கியது. சகோ. அபுபக்கர் அவர்கள்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். சகோ. காதர் அலி அவர்கள் நிகழ்ச்சியை திருக்குர்ஆன் வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்கள்.
பின்னர் சகோ. முகம்மது பைஸல் அவர்கள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய ஒரு அறிமுகத்தை அனைவருக்கும் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து சகோ. திப்பு சுல்தான் அவர்கள் மாநாட்டின் நோக்கம் பற்றிய உரையாற்றினார். நமது நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைப் பற்றியும், முஸ்லிம்களின் நிலைகளைப் பற்றியும் விரிவாகஎடுத்துரைத்தார். முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக இதுவரை போடப்பட்டிருந்த கண்துடைப்புகமிஷன்களும் அவற்றின் தீர்வுகள் எதையுமோ நடைமுறைப்படுத்தாததையும் சுட்டிக்காட்டினார். இதுவரை நடந்த குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் காரணம் இந்துத்துவ தீவிரவாதம் எனத் தெரிந்தும் இன்னும் முஸ்லிம்கள் சிறைகொட்டடிகளில் அடைபட்டு இருப்பதும், குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித்திரிவதும் முஸ்லிம்களுக்கு செய்யப்படும் துரோகம், அநீதி என சுட்டிக்காட்டினார். இந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் சம நீதி வேண்டி நடத்தப்படுவதே இந்த மாநாட்டின் நோக்கம் எனஎடுத்துரைத்தார்.
இதுபோன்ற நிகழ்சிகள் நடக்கும்போது சகோதர இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், ஜமாஅத்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அதற்காக வேண்டியே இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும் கூறினார்.
பின்னர் கலந்துரையாடல் நடைபெற்றது. வருகை புரிந்த அனைவருமே மிகவும் சிறப்பாக சுட்டிக்காட்டிய விஷயம் பிரச்சாரக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை பற்றியதாகும். அனைவருமே கூறும்போது இன்று சகோதர இயக்கங்களை வெறுப்பாக பார்க்கும் நிலைமாறி இதுபோல ஒரு மேஜையில் அமர்ந்து நமது கருத்துக்களை விவாதிக்கும்போது நிச்சயமாக அதில் பலன் பெறப்போவது நமது சமுதாயம்தான் என்பதை குறிப்பிட்டார்கள்.
தனித்தனியாக போராடும் போது கிடைக்கும் பலனை விட பொது விஷயங்களில் ஒருமித்து நின்று குரல்கொடுக்க வேண்டும் என்பது அனைவருடையவும் எண்ணமாக பிரதி பலித்தது. இந்த மாநாட்டின் தேவையையும் அவர்களது கருத்துகளிலிருந்து தெரிய முடிந்தது. மேலும், மாநாடு சம்பந்தமான அவர்களது கேளிவிகளுக்கு முறையாக விளக்கமும் அளிக்கப்பட்டது. வந்திருந்த அனைவரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பு இப்போதும் எப்போதும் தர தயார் எனஉறுதியாக எடுத்துரைத்தார்கள்.
சகோ. அஹமது மீரான் அவர்கள் நன்றியுரை கூறினார். இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போது இதுபோன்ற நிகழ்ச்சிகள் சாத்தியமா? அப்படி நடந்தாலும் சுமூகமான முறையில் நடக்குமா என்ற ஒரு அச்சம் ஆரம்பத்தில் இருக்கத்தான் செய்தது. ஆனால், இறைவனின் அருளால்வந்திருந்த அனைத்து சகோதரர்களிடமும் இதுபோன்ற ஒன்றுகூடல்கள் அவசியம் என்கிற கருத்துஇருப்பதை காணமுடிந்தது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அதை முதலில் ஆரம்பித்துவைத்திருக்கிறது. வரும் காலங்களில் மற்ற அமைப்புகளும் இதுபோன்ற ஒன்றுகூடல்களை ஏற்படுத்தி அமைப்புகளுக்கிடையில் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதற்கு எல்லாவிதமான ஒத்துழைப்புகளை தர பாப்புலர் ஃபிரண்ட் தாயாராக இருப்பதாகவும் தெரியப்படுத்தினார்.
இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. இன்முகத்துடன் விருந்தில் அனைவரும் கலந்து கொண்டனர்.