மதுரை: 05-09-2012 இன்று மாலை சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்து தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவ்விபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த மக்கள் மதுரை, விருதுநகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள், அவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றது போன்ற பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள்.
NOV 2013
வியாழன், 6 செப்டம்பர், 2012
த சண்டே இந்தியன் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு ஒரு முஸ்லிம் சகோதரனின் கடிதம்
தாங்கள் செப்டம்பர் 16 தேதியிட்ட சண்டே இந்தியன் தமிழ் இதழில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எழுதிய கடிதம் பார்த்து ஓர் அளவு சந்தோசமும் ஓரளவு கவலையும் பட்டுக்கொண்டேன்.ஏநென்றால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லாதது போலவும் முஸ்லிம்கள்தான் பிரச்சனைகளுக்கும் தீவிரவாதத்திர்க்கும் காரணம் என்பது போலவும் எழுதி வரும் மீடியா உலகில் அதற்க்கு சிறிது மாற்றமாக இந்தியாவில்
முஸ்லிம்களும் ஏனய மக்களும் பிரச்சனைகளில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் இருக்கும் சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் ஆதலால் நாம் போராட நாம் கவனம் செலுத்த இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது என்ற அறிவுருத்தலான செய்திகளையும் பார்த்த சமயம் ஓரளவு சந்தோஷ பட்டேன்.
செத்துருக்கலாமோ? நரகத்தின் நடுவில்..............
அஸ்ஸாமில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரோடிருக்கும் முஸ்லிம்களின் மனநிலைதான் மேலே கொடுக்கப்பட்ட தலைப்பின் வார்த்தை.ஏன் அடிக்கிறார்கள்? எதற்கு அடிக்கிறார்கள்? ஏன் ஊரை விட்டு வீட்டை விட்டு காலி செய்து வந்தோம் என பல கேள்வி கணைகளோடு அகதிகள் முகாமில் கலவரம் என்ற கோரதாண்டவத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் முஸ்லிம்களின் நிலையை பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அமைப்புக்களை கண்காணிக்கிறோம் நிறுவனங்களை கண்காணிக்கிறோம் என அரசாங்கத்தால் சொல்லப்படும் அமைப்புக்களும் நிறுவனங்களும் இல்லை என்றால் என்றோ இவர்களும் செத்து போயிருக்கலாம்.முகாமுக்கு வெளியேயான உலகம் குண்டுகளாலும் அம்புகளாலும் ஆனது என்றால் முகாமிற்குள்ளான வாழ்க்கையை நரகம் என்று சொல்லலாம்.அந்த அளவிற்கு மிக மோசமாகவும் இன்னொரு கொடுமைகளும்தான் அங்கு நடக்கிறது.
முகாம்களில் இருக்கும் ஒரு சில நிலைகளை அவர்களே கூறியதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012
அஸ்ஸாம் கலவர பூமியில் தீவிரமாக பணியாற்றும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்கள்!
கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் 149 அகதிகள் முகாம்களிலும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்களின் துயர் துடைப்பு பணிகள் தொடர்கின்றன.
இந்த முகாம்களில் 3,20,750 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரச்சனைகளால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருக்கும் 20 முகாம்களில் ரிஹாப் சேவைத் தொண்டர்களால் செல்ல இயலவில்லை. ஊடக செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அஸ்ஸாம்,மியான்மர் கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை: 2 பேர் பலி!
மும்பை:அஸ்ஸாம் கலவரம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழித்தொழிப்பு ஆகியவற்றை கண்டித்து ராஸா அகாடமி சார்பாக மும்பை ஆஸாத் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இச்சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மியான்மரில் ராகேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அரசு உதவியுடன் புத்தர்கள் நடத்தி வரும் இன அழித்தொழிப்பைக் கண்டித்து மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் ராஸா அகாடமி என்ற அமைப்பின் சார்பாக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
மோட்சம் வேண்டுமா மோடியே...?
பத்ர் தரும் பாடம்!
மனித குலத்திற்கு நேர்வழி காட்டும் புனித திருக்குர்ஆனை (2:185) இறக்கியருள அகிலங்களை படைத்து
பரிபாலிக்கும் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம் தான் ரமலான்.
மனித
சமூக வாழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை மாபெரும் மாற்றத்தை எக்காலத்திலும் உருவாக்கிக் கொண்டிருக்கும் புரட்சி
வேதம்தான் திருக்குர்ஆன். மனித சமூகத்திற்கு ஓர் பூரணமான விடுதலையை திருக்குர்ஆன்
லட்சியமாக கொண்டுள்ளது. சாத்தானிய சக்திகளிடமிருந்து விடுதலை, ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளின் அடிமைத்தனத்தில்
இருந்து விடுதலை, மனோ
இச்சையில் இருந்து விடுதலை, உலகியல்
வாழ்வின் அதி மோகத்தில் இருந்து விடுதலை ஆன்மீகத்தின் அபத்தமான பயணத்தில் இருந்து விடுதலை மரணத்திற்கு பிந்தைய வாழ்வில்
நரகில் இருந்து விடுதலை – இவ்வாறு
திருக்குர்ஆன் சமர்ப்பிக்கும் விடுதலை கொள்கை உலகியல் மற்றும் மரணத்திற்கு பிந்தைய
வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாகும்.
புதன், 8 ஆகஸ்ட், 2012
"குஜராத் இனக்கலவரம்"
வியாழன், 2 ஆகஸ்ட், 2012
மியன்மார்: உலக மனச்சாட்சி இறந்துவிட்டதா?
மியன்மாரில் (பர்மா) கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளும் வன்முறைகளும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஏன் பெறவில்லை என்பது ஆச்சரியமான கேள்வியாகவே உள்ளது.
இதுவரை சுமார் 20,000 முஸ்லிம்கள் -குழந்தைகள்,பெண்கள் உள்ளிட்டு- பதறப் பதறப் படு கொலைசெய்யப்பட்டுள்ளனர். உண்மையில்,கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் இடம்பெயர்ந்தோர் தொகை என்பவற்றை துல்லியமாக அறிய முடியாத நிலையே தொடர்கின்றது.
அஸ்ஸாம் கலவரம் - பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வீடு திரும்ப அரசு உதவ வேண்டும்!
அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலகம் வலுவான கோரிக்கையை
மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!
தேசவிடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.
அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.
சுதந்திர போராட்ட வீரர் தளபதி திருப்பூர் மொய்தீன்
பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார்.
தளபதி மொய்தீன் அவர்களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரந்துபட்டதாகும். "கொடி காத்த குமரன்" என்று இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழரின் வீரத்திற்கு இலக்கணமாக விளைந்த திருப்பூர் குமரனும், திருப்பூர் மொய்தீன் அவர்களும் ஒரே ஊரவர்கள் மட்டும் அல்ல. ஒன்றாக அரசியல் என்னும் வேள்வி குண்டத்திலே குதித்தவர்கள். அந்நிய நாட்டு துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு இருவரும் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்தார்கள். இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக கிளைத்த ரயில் வண்டி மறியலிலும் இருவரும் ஒன்றாகவே செயலில் இறங்கினர்.
புனேயில் மலேகான் மாதிரி தொடர் குண்டுவெடிப்பு! – இருவர் காயம்!
புனே: மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற சுசீல்குமார் ஷிண்டேயின் வருகைக்கு சற்று முன்பு புனேயில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஏழு நிமிடங்களுக்கு இடையே நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதர 3 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் செயலிழக்கப்பட்டன.
பாலகந்தர்வா திரையரங்கு, ஜங்கிலி மகாராஜா சாலையில் (ஜே.எம். சாலை) உள்ள தேனா வங்கிக் கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டொனால்ட் உணவகம் அருகிலிருக்கும் குப்பைத் தொட்டி, கார்வாரே பாலம் ஆகிய 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன.
செவ்வாய், 31 ஜூலை, 2012
நாகர்கோவிலில் வீடுகள் மீது கல்வீச்சு! – நள்ளிரவில் முஸ்லிம்கள் சாலை மறியல்!
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இடலாக்குடி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர் ஆகும். இடலாக்குடியில் ஆஸாத் கார்டன் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில் நேற்று சில மர்ம நபர்கள் முஸ்லிம் ஆண்கள் ரமலான் இரவு சிறப்புத் தொழுகைக்கு(தராவீஹ்) சென்ற வேளையில் வீடுகள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ஷேக் மன்சூர், அஹ்மத் கான், நூர்ஜஹான் ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி முஸ்லிம்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் வாழும் ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நள்ளிரவு 11 மணி அளவில் திரண்டு வந்து நாகர்கோவில்-கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அஸ்ஸாம் மக்களுக்காக உதவுங்களேன்...!
அஸ்ஸாம் மக்கள் மீண்டும் உங்களின் உதவியை எதிர்பார்கிறார்கள்.
அரசு தரப்பு டி.ஜி.பி ஜே.என். செளத்ரியின் அறிக்கை படி அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் மொத்தம் 3,78,045 மக்கள் (முஸ்லிம்கள் 2,66,700, பெளத்தர்கள் 1,11,345) வீடுகளை இழந்து அநாதைகளாக ஆகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உயிர்களை இழந்துள்ளனர்.
அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களின் விபரம் வருமாறு:அரசு தரப்பு டி.ஜி.பி ஜே.என். செளத்ரியின் அறிக்கை படி அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் மொத்தம் 3,78,045 மக்கள் (முஸ்லிம்கள் 2,66,700, பெளத்தர்கள் 1,11,345) வீடுகளை இழந்து அநாதைகளாக ஆகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உயிர்களை இழந்துள்ளனர்.
திங்கள், 30 ஜூலை, 2012
இந்திய குடிமக்களை வங்காளதேச குடியேற்றக்காரர்களாக சித்தரிக்க முயற்சி! – எஸ்.டி.பி.ஐ
புதுடெல்லி : அஸ்ஸாம், உ.பி மாநிலங்களில் வெடித்து கிளம்பிய கலவரங்கள் குறித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்டுள்ளது. வகுப்புவாத கலவரங்களை குறித்து விசாரணை நடத்த நீதி விசாரணை கமிஷனை நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ தேசியதலைவர் இ.அபூபக்கர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுத்தொடர்பாக இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ‘இரு கலவரங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் ஆவர். மாநில அரசு கற்பனை எண்ணத்தை கைவிட்டு நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்
சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக அமைப்பைச்சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜமாத் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிற இயக்க தலைவர்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்து அதன் மூலமாக சமூகத்திற்கு பயன் தரக்கூடிய செயல்களை ஒன்றினைந்து செயல்படுத்துவதற்காக ஒரு தலைப்பின் கீழ் விவாதம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இவ்வருடமும் நேற்றைய தினம் அண்ணா சாலையிலுள்ள வெல்லிங்டன் பிளாசாவில் வைத்து நடைபெற்றது.
ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிற இயக்க தலைவர்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்து அதன் மூலமாக சமூகத்திற்கு பயன் தரக்கூடிய செயல்களை ஒன்றினைந்து செயல்படுத்துவதற்காக ஒரு தலைப்பின் கீழ் விவாதம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இவ்வருடமும் நேற்றைய தினம் அண்ணா சாலையிலுள்ள வெல்லிங்டன் பிளாசாவில் வைத்து நடைபெற்றது.
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!
இறையருள் அதிகம் பெருவதற்காகவும், நன்மைகளை அள்ளிக்கொள்வதற்காவும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனித மிகு ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்றோம். இந்த சிறப்பான தருணத்தில் ஒரு சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்!
இறையருள் அதிகம் பெருவதற்காகவும், நன்மைகளை அள்ளிக்கொள்வதற்காவும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனித மிகு ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்றோம். இந்த சிறப்பான தருணத்தில் ஒரு சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன்.
இன்றைய காலகட்டத்தில் அரபு உலகம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக ஜனநாயகம் அமைந்துள்ளது என்பதை எவறாலும் மருக்கவியலாது. இன்றைய காலகட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடும் தன்மை எல்லா நேரங்களிலும் வெற்றியை அளிப்பதில்லை என்பதை சமீபத்திய நாட்களில் நிறைய உதாரணங்களை நம்மால் காண முடியும்.
ஞாயிறு, 29 ஜூலை, 2012
மங்களூர் ரிசார்ட் பார்டியில் சங்க்பரிவார் தாக்குதல்!
மங்களூர் : 3 ஆண்டுகளுக்கு முன்பு மங்களூரில் பப்கள் மீது நடத்திய தாக்குதலைப் போன்றதொரு சம்பவம் மீண்டும் அங்கு அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரின் புறநகர் பகுதியான பாடிலுவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று இரவு மது விருந்து நடந்தது. அதில் அரை குறை ஆடையணிந்த இளம் பெண்களும், வாலிபர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்து நடப்பது பற்றி தகவல் அறிந்த இந்து ஜகரன் வேதிகே அமைப்பைச் சேர்ந்த 50 பேர் அந்த ரிசார்டுக்குள் புகுந்து அங்கிருந்த இளம் பெண்களையும், வாலிபர்களையும் ஓட, ஓட அடித்து உதைத்தனர். இதில் 2 பெண்களும், பல வாலிபர்களும் காயம் அடைந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








