NOV 2013
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
சனி, 20 அக்டோபர், 2012
வெள்ளி, 19 அக்டோபர், 2012
பாப்புலர் ப்ரண்ட் ஏன் ? சம நீதி மாநாடு - கேரளா மாநிலம் கொச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்
கேரளா : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேரளா மாநிலம் கொச்சியில் 18.10 .2012 அன்று நடத்திய சம நீதி மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை குறித்து அவதொர்று பரப்புபவர்களுக்கு இம்மக்கள் வெள்ளம் தகுந்ததொரு பாடமாக அமைந்தது. மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் எந்தவொரு இயக்கத்தையும் தவறான பிரச்சாரங்கள் மூலம் தடுத்து விட முடியாது என்பதை இம்மாநாடு தெளிவுப்படுத்தியது. தேச விரோத சக்திகளுக்கு தகுந்ததொரு எச்சரிக்கையையும் இம்மாநாடு விடுத்துள்ளது.
மாநாடு நடைபெற்ற மெரைன் டிரைவ் பகுதிக்கு காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் மாநாடு
கோவை மண்டல மாநாடு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்டின் மாநில தலைவர் இஸ்மாயீல் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை
கோவை (அக்டோபர் 19 , 2012) : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் " குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் - நீதிக்கான முழக்கம் " என்ற தலைப்பில் கோவை மண்டல மாநாடு நடைபெறுகின்றது . மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! என்ற முழக்கத்தோடு இம்மாநாடு நடைபெறும்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஒடுக்கப்பட்ட சமூகங்களை கல்வி, சமூக மேம்பாடு என அனைத்து தளங்களிலும் சக்திப்படுத்த ஜனநாயக வழிமுறைகளில் போராடும் தேசிய அளவிலான ஒரு மக்கள் பேரியக்கமாகும். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சக்திபெறுவதை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ப்ரண்டிற்கு எதிராக பல அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.
புதன், 17 அக்டோபர், 2012
குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குழு மக்களை அவர்களின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக சந்திக்கும். ஆங்கிலம், இந்தி, உருது, பெங்காளி, மணிப்பூர், மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலயாளம் ஆகிய மொழிகளில் சுவரொட்டிகளும் பிற பிரச்சார சாதனங்களும் விநியோகம் செய்யப்படும். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழுக்கள் வாகன பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் பத்து இலட்சம் நகரங்கள் மற்றும் கிராமங்களை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
சமநீதி மாநாடுகள் கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடத்தப்படும். கர்நாடகாவில் பெங்களூர், குல்பர்கா, மைசூர் மற்றும் மங்களூர் நகரங்களில் மக்கள் மாநாடுகள் நடத்தப்படும். ஆந்திராவின் குர்னூலில் மாநில மாநாடும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேசிய ஒற்றுமை மாநாடும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது போன்ற பெரும் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டின் நிறைவை குறிக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களின் சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் மக்கள் ஆதரவு மாநாடு தலைநகர் டெல்லியில் வைத்து நடைபெறும்.
திங்கள், 15 அக்டோபர், 2012
புளியங்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்-பொதுக்கூட்டம்!
புளியங்குடி: நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பாக புளியங்குடியில் வைத்து ஏன் பாப்புலர் ஃப்ரண்ட்? துவக்க நாள் பொதுக்க்கூட்டம் 14 - 10 - 12 ஞாயிற்றுக்கிழமை அன்று 6.45 மணியளவில் நடை பெற்றது. இதில் புளியங்குடி நகரபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமை தாங்கினார்கள்.நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
வெள்ளி, 28 செப்டம்பர், 2012
"கல்விக்கூட ஜனநாயகம் காப்போம்" - கேம்பஸ் ஃப்ரண்ட்
வலிமையான ஜனநாயக கட்டமைப்பிற்க்கு மாணவர்களின் பங்கு இன்றியமையாதது. முhணவ அரசியல் மூலம் மாணவர் நலன் சார்ந்த விஷயங்களிலும் தேசிய நலன் சார்ந்த விஷயங்களிலும் உரிமைகளை போராடி வென்றெடுக்க இயலும்.
கேம்பஸ்களில் ஜனநாயகத்தை அணுமதிப்பது மாணவர்கள் கல்விக்கூட அரசியல் மற்றும் தேசிய அரசியலில் ஈடுபட பெரிதும் உதவும். சிறந்த அரசியல் தலைவர்களுடனான மாணவர் சந்திப்பினை ஏற்படுத்துவதன் மூலம் இதனை வலுப்படுத்தலாம்.
கேம்பஸ்களில் ஜனநாயகத்தை அணுமதிப்பது மாணவர்கள் கல்விக்கூட அரசியல் மற்றும் தேசிய அரசியலில் ஈடுபட பெரிதும் உதவும். சிறந்த அரசியல் தலைவர்களுடனான மாணவர் சந்திப்பினை ஏற்படுத்துவதன் மூலம் இதனை வலுப்படுத்தலாம்.
புதன், 19 செப்டம்பர், 2012
இனவெறி!, இஸ்லாத்திற்கு எதிரான கொலைவெறி!
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது அவதூறுகளும், அபாண்டங்களும் அள்ளி வீசப்பட்டு கொண்டிருக்கின்றன. எங்கோ இருக்கின்ற டென்மார்க் தொடங்கி அமெரிக்கா, இஸ்ரேல் என்ன? நம் கண் முன்னால் கடைகளில் தொங்கும்
தினமலர் வரை கேலி சித்திரங்களும், தகாத தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. அதன் உச்சகட்டமாக இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘innocence of Muslims’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
முஹம்மது நபியை அவர்கள் ஏன் வெறுக்கிறார்கள்...?
சமீபத்தில் இஸ்லாத்தின் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி ஒருவன் திரைப்படம் தயாரித்த விவகாரத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் கொதித்தெழுந்து அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அரசாங்கமோ இது தொடர்பாக கூறும்போது "எங்களது நாட்டில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது. யார் வேண்டுமானாலும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடலாம். அது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம் எனவே இது தொடர்பாக அமெரிக்க அரசு தலையிடாது எனவும் அவ்வாறு திரைப்படம் தயாரித்தவனை தண்டிக்கவியலாது" எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ள அதே சமயம் உலகில் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களை மன்னிக்க மாட்டோம் எனவும் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவந்து தண்டிப்போம் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.
சனி, 15 செப்டம்பர், 2012
அப்பாவி சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மனித சங்கிலி போராட்டம்
அப்பாவி சிறைவாசிகளை பிணையில் விடுவிக்கக் கோரி ”சட்டப்படி பிணையில் விடு அப்பாவிகளை விடுதலை செய்” என்ற
முழகத்தை முன்வைத்து கடந்த 15.08.2012 முதல் 15.09.2012 வரை பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அதன் நிறைவாக டெல்லி
(ஜந்தர் மந்தர்) மற்றும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட
இடங்களில் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டத்தை 15.09.2012 அன்ற
ஒரே நேரத்தில் நடத்தியது.
இப்போராட்டத்தில் பெருந்திரளான
மக்கள் கலந்து கொண்டு நீதிக்கான போராட்டத்தில் தங்களின் கைகளும் துணை நிற்கும்
என்பதை உறுதி செய்தனர்.
வெள்ளி, 14 செப்டம்பர், 2012
அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் கடையநல்லூரில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்
முஸ்லீம்கள் உயிரினும் மேலாக
மதிக்க்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில்
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மகாணத்தில் வசிக்கும் யுத இனத்தைச் சேர்ந்த ஷாம்
பேசிலி என்ற திரைப்பட இயக்குனரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற
கிருஸ்தவ போதகரும் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
இதனால் உலகம் முழுவதும் முஸ்லீம் சமூக மக்களிடையே பெரும்
கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு நாடுகளில் அமெரிக்காவை கண்டித்து பலவகையான
போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.எகிப்து,லிபியா,யெமன்,துனீசியா,பாகிஸ்தான்,லெபனான்,சூடான்,இந்தியா,மெராக்கா,
ஃபலஸ்தீன்,பங்களாதேஸ்,ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில்
ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி
வருகின்றனர்.
புதன், 12 செப்டம்பர், 2012
முஸ்லிம் இளைஞர்களின் கைது: ஜோடிக்கப்பட்டது – மனித உரிமை ஆர்வலர்கள்!
முக்கிய பிரமுகர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என குற்றம் சாட்டி உயர் கல்வி கற்ற முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த கர்நாடகா போலீஸின் நடவடிக்கை அடுத்த தேர்தலை இலக்காக கொண்ட வகுப்பு பிரிவினைவாத அஜண்டா என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

கோமு நல்லிணக்க பேரவையின் தலைமையில் பெங்களூர் ப்ரஸ் க்ளப்பில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் மனித உரிமை ஆர்வலர்கள் கர்நாடகா க்ரைம் ப்ராஞ்ச் போலீசாரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர். போலீசார் பொய் கதைகளை இட்டுக் கட்டியுள்ளார்கள். எஃப்.ஐ.ஆர் மற்றும் போலீஸ் ஆவணங்களில்இருந்து இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று மூத்த உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான வழக்கறிஞர் எ.கே.சுப்பைய்யா கூறினார்.
திங்கள், 10 செப்டம்பர், 2012
69% இடஒதுக்கீட்டை தக்க வைக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் செயலக கூட்டம் வேண்டுகொள்...
07-09-2012 அன்று மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலக கூட்டம் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் காலித் மற்றும் மாநில துணை தலைவர் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1950 யில் தமிழகத்தில் அமுலில் இருந்த வகுப்புரிமை ஆணையை எதிர்த்து செண்பகம் மற்றும் துரைராஜன் என்ற இரு மாணவர்கள் தங்களுக்கு கல்லூரியில் வகுப்புரிமை ஆணையினால் இடம் கிடைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது உயர் சாதியினருக்கு (பிராமணர்களுக்கு) மட்டுமே 14.29% இடஒதுக்கீடு அமுலில் இருந்த சமயத்தில் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்றைய சென்னை உயர் நீதி மன்றம் இவ்வழக்கை ஏற்று இரு மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காததால் வகுப்புரிமை ஆணையையே ரத்து செய்தது.
1950 யில் தமிழகத்தில் அமுலில் இருந்த வகுப்புரிமை ஆணையை எதிர்த்து செண்பகம் மற்றும் துரைராஜன் என்ற இரு மாணவர்கள் தங்களுக்கு கல்லூரியில் வகுப்புரிமை ஆணையினால் இடம் கிடைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது உயர் சாதியினருக்கு (பிராமணர்களுக்கு) மட்டுமே 14.29% இடஒதுக்கீடு அமுலில் இருந்த சமயத்தில் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்றைய சென்னை உயர் நீதி மன்றம் இவ்வழக்கை ஏற்று இரு மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காததால் வகுப்புரிமை ஆணையையே ரத்து செய்தது.
கூடங்குளம்:போலீஸ் பயங்கரவாதம் -தெஹ்லான், நெடுமாறன், வேல்முருகன் கண்டனம்!
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடத்திய சுற்றுவட்டார மக்கள் மீது அராஜக தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுஅப்பகுதியை கலவரக் காடாக மாற்றியுள்ள தமிழக ஜெயா அரசின் காவல்துறைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் அராஜகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ, ம.ம.க சாலை மறியல்!
சென்னை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் அராஜக தாக்குதலை கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளத்தில் இன்று காலை அமைதியான வழியில் போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் கலவரத்தை ஏற்படுத்திய காவல்துறையினரை கண்டித்தும், இடிந்தகரை பகுதியில் இருந்து
வியாழன், 6 செப்டம்பர், 2012
பாப்புலர் ப்ரண்ட் நிர்வாகிகள் சந்திப்பு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் 2012 செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் கீழ்கானும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. மாநில தலைவர் A.S. இஸ்மாயில் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் S. பைசல் அஹமது செயற்குழு உடனே நிஜாம் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ரம்ஜான் பெருநாள் தினத்தன்று அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்பதற்க்காக தமிழகம் முழுவதும் மசூதிகளில் அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வசூல்செய்யப்பட்டது. இதில் மொத்தம் ரூபாய் 39,95,121 வசூல் செய்யப்பட்டது. இத்தொகையை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைமையிடம் ஒப்படைப்பது என்றும் அஸ்ஸாம் நிவாரணமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக தமிழகத்திலிருந்து ஒரு குழு நேரடியாக செல்வது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சிவகாசி தீ விபத்து - நிவாரணப்பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்
மதுரை: 05-09-2012 இன்று மாலை சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்து தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவ்விபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த மக்கள் மதுரை, விருதுநகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள், அவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றது போன்ற பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








