நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

ஊடகங்களில் கனவிற்கு விளக்கம் கேட்பதற்கு சவுதியின் மூத்த உலமா எச்சரிக்கை


ஜெத்தா : சவுதியா அரேபியாவை சேர்ந்த மூத்த உலமா முப்தி ஷேக் அப்துல் அஜீஸ் அல் அஷ்ஷெய்க் என்பவர் பொது மக்கள் தாங்கள் காணும் கனவிற்கு தொலைக்காட்சியிலும், வானொலியிலும் விளக்கம் கேட்பதை எதிரத்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்க்கு காரணம் 75% க்கும் மேலானோர் தாங்கள் காணும் கெட்ட கனவிற்கு தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அனுபவமுள்ளவர்கள் என்றெண்ணி தங்கள் கனவிற்க்கான அர்த்தங்களை கேட்பதை பழக்கமாகவும், திருப்தியாகவும் கருதுகின்றனர். இப்படி அனுபவும் நிறைந்தவர்கள் என்று கருதப்படும் இவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி போதுமான அறிவு இல்லை என்று ரியாத்தில் உள்ள இமாம் துகி பின் அப்துல்லா மஸ்ஜிதில் வெள்ளிகிழமையன்று தான் நடத்திய பேருரையில் தெரிவித்துள்ளார்.
வளரும் தலைமுறைகள்  இது போன்ற நிகழ்ச்சியில் அதிகமாக பங்கெடுத்து கொள்வதை உணர்ந்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும், சுன்னாவையும்  உறுதியாக பின்பற்றுபவராக இருந்தால் தாங்கள் காணும் கெட்ட கனவுகளை மற்றவர்களிடம் சொல்லாமல் இருப்பதே சிறந்தது. அப்படி தாங்கள் காணும் ஒரு சில கனவுகளுக்கு விளக்கம் வேண்டும் என்றால் இஸ்லாத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற உலமாக்களிடம் விளக்கம் கேட்பதே உகந்தது என்றும் தெரிவித்தார். இது போன்ற தங்களின் கனவுகளை பற்றி மக்கள் அனைவரும் காணும், கேட்கும் ஒரு பொது ஊடகங்களில் சொல்வதன் மூலம் மற்றவர்களால் அவர்களுக்கு தீங்கு ஏற்படவே வாய்ப்பு உள்ளது.
இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதன் பணம் சம்பாதிப்பதே நோக்கம், இதனால் ஊடகளுக்கு எஸ்.எம்.எஸ் செய்வதாலும், தொலைபேசியில் தொடர்பு கொள்வதாலும் அவர்களின் வர்த்தகமே பெருகுகிறதே தவிர மக்களுக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் சவுதியின் ஊடங்களில் ஒளிபரப்ப அனுமதி இல்லை.
கடந்த ஜூலை மாதம் கனவுக்கு விளக்கம் அளித்த ஒருவருக்கு 2 வருட சிறைத் தண்டனையும், 300 கசையடியும் ரியாத் நீதிமன்றம் அளித்துள்ளது.

பரமக்குடியில் கலவரம் – துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி


பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜான்பாண்டியன்  கைதால் பரமக்குடியில் இன்று பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 2 போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான் பாண்டியன் தூத்துக்குடியிலிருந்து கிளம்பினார். அப்போது வல்லநாடு பகுதியில் அவரை போலீஸார் தடுத்து தூத்துக்குடி கொண்டு சென்றனர். அவர் கைதும் செய்யப்பட்டார்.

லோக்யுக்தா பிரச்சனையால் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலுக்கு மோடி வருகை தர மறுப்பு


புதுடெல்லி:பிரதமர் மன்மோகன் சிங்கால் ஏற்ப்பாடு அழைப்பு விடுக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் சந்திப்புக்கு வருகை தர குஜராத் முதலமைச்சர் மறுப்பு விடுத்துள்ளார்.
இதற்க்கான காரணம், லோக் ஆயுக்தா சட்டத்தை குஜராத் மாநிலத்திற்கு தனிப்பட்ட முறையில் அமைக்க வேண்டும் என்ற குஜராத் கவர்னர் கம்லா பெனிவாலால் சமர்பிக்கப்பட்ட அறிவிப்பை, மத்திய அரசாங்கத்திடம் திரும்பப் பெறுமாறு மோடி கேட்டுக் கொண்டார், ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து மோடி மிக வருத்தத்தில் உள்ளதால் இந்த சந்திப்பை ஏற்கு மறுத்துள்ளதாக அறியப்படுகிறது.

சனி, 10 செப்டம்பர், 2011

7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்க ! தமிழக அரசுக்கு பாப்பலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் !


கடையநல்லூர்: விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 18 ஆட்டோக்கள் பறிமுதல்


கடையநல்லூர் :  கடையநல்லூர் பகுதியில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    
தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முத்துசாமி உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடகிருஷ்ணன்,ஜெய்மனோகர் ஆகியோர் கடையநல்லூர் பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றது, ஷேர் ஆட்டோக்கள் போல் தனித்தனியாக டிக்கெட் வசூலித்துப் பயணிகளை ஏற்றிச் சென்றது உள்ளிட்ட பல்வேறு அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
    
இதுபோன்ற ஆய்வு நடவடிக்கைகள் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.

அனைவருக்கும் அடையாள அட்டைகள்: முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்


சென்னை : முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இணையும் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க மாநில அளவில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவை விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை படித்த அறிக்கை:
"விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில், புதிய, விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய திட்டம், ""முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்'' என்று அழைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ், 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் முதலியவற்றை உடமையாகக் கொண்டு, அந்த நிலத்தில் நேரடியாகப் பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகள் பயன்பெறுவர்.
விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்துக்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரையுள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள்.
எந்த நிறத்தில் அட்டை: ஒரு குடும்பத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் பண்பேறிய சிவப்பு வண்ணத்திலும் (மெரூன்) அவர்களைச் சார்ந்து வாழும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிறத்திலும் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
இந்த அடையாள அட்டை பெறுபவர்கள் அனைவரும் அரசின் திட்ட உதவிகளைப் பெறத் தகுதி உடையவர்கள். இதுவரை குடும்பத் தலைவருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்த நிலை மாறி புதிய உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் திட்ட உதவிகளைப் பெற வழி ஏற்படும்.
கல்வி உதவி: விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வேறு எந்த கல்வி உதவித் திட்டத்தின்கீழ் உதவி பெற்றாலும், இந்தத் திட்டத்தின் கீழும் கல்வி உதவித் தொகை பெற வழி செய்யப்பட்டுள்ளது.
ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் இதர பட்டயப் படிப்புகளுக்கு ரூ.1,250 முதல் ரூ.1,950 வரை ஆண்டுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு ரூ.1,750 முதல் ரூ.2,500 வரை ஆண்டுக்க கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். முதுகலை பட்டப் படிப்புகளுக்கு ரூ.2,250 முதல் ரூ.3,750 ஆண்டுக்கு வழங்கப்படும். சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல் போன்ற தொழில் கல்வி படிப்புகளுக்கு இளங்கலையில் ரூ.2,250 முதல் ரூ.4,750 வரையிலும், முதுகலையில் ரூ.4,250 முதல் ரூ.6,750 வரையிலும் ஆண்டுக்கு கல்வித் உதவித் தொகையாக அளிக்கப்படும்.
திருமண உதவி: சமூகநலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற தகுதி உள்ளவர்கள் அந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவர். திருமண உதவி திட்டங்களின் கீழ் உதவித் தொகை பெற இயலாதவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், ஆணுக்கு ரூ.8 ஆயிரமும், பெண்ணுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
மகப்பேறு உதவித் தொகை-முதியோர் ஓய்வூதியம்: பதிவுபெற்ற உறுப்பினருக்கு சுகாதாரத் துறையால் மகப்பேறு உதவிக்கென செயல்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்படும். மகப்பேறு உதவித் தொகையினை எளிதாகப் பெறும்வகையில் தனி வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மூலம் தேவையான சான்றிதழ்களை ஒருமுகப்படுத்தி வழங்க இந்தத் திட்டத்தின் கீழ் வசதிகள் செய்து தரப்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மாதத்துக்கு ரூ.1,000 ஓய்வூதியமாகப் பெறுவர். இந்தத் திட்டத்தின் உறுப்பினரோ அல்லது அவரைச் சார்ந்தவரோ இறக்க நேரிட்டால் அந்தக் குடும்பத்துக்கு ஈமச் சடங்குக்கான உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும். ஈமச் சடங்கு நிவாரணம் பெற இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படுகிறது.
திட்டச் செயலாக்கம்: ""முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்'' மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலமாகச் செயல்படுத்தப்படும்.திட்டச் செயல்பாட்டினை மேற்பார்வையிட அரசு அளவில் ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும்' என்றார் முதல்வர் ஜெயலலிதா.

போக்குவரத்துத் துறையில் "754 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்'


சென்னை : போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள 754 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - 2, உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய 754 பணியிடங்கள் நிரப்பப்படும்.

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.

இது உளவுத் துறையின் தோல்வியால் நடந்த குண்டுவெடிப்பு - மன்மோகன் சிங்

டெல்லி : உளவுத் துறை சரியான நேரத்துக்கு துப்பு கொடுத்து எச்சரிக்காததால்தான் இந்த குண்டுவெடிப்பே நிகழ்ந்தது, என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

15-வது தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கிழக்கு ஆப்ரிக்காவில் ஏழு லட்சத்திற்கும் மேலானோர் மரணம் அடைய வாய்ப்பு: ஐ.நா அதிர்ச்சி தகவல்


லண்டன் : கிழக்கு ஆப்ரிக்காவில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் ஏழு லட்சத்திற்கும் மேலானோர் மரணம் அடைய வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை ஐ.நா அறிவித்துள்ளது.

கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள பஞ்சத்தின் காரணமாக அவர்களுக்கு தகுந்த முதலுதவி கிடைக்கவில்லையென்றால் அடுத்த நான்கு மாதங்களுக்குள் லட்சக்கணக்கானோர் இறக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, இந்த பகுதியில் 12 மில்லியனுக்கும் மேற்ப்பட்டோர் உணவு தேவை உள்ளதாகவும், அதில் நான்கு மில்லியனுக்கும் மேலானோர் சோமாலியாவை சேர்ந்த மக்களே  என்று பிரபல பத்திரிக்கை டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டோம்! - ஜெயலலிதா

சென்னை : கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டோம். கடும் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

போக்குவரத்து துறைமானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் விஜய் பேசுகையில், "கடந்த ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனி புத்தகமே வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

அல்-மறாய் கம்பெனிக்கு வேலைக்கு ஆட்கள் தேவை

ரியாத் மாநகரிலுள்ள மிகப் பெரிய கம்பெனியான அல்-மறாய் கம்பெனிக்கு ஆட்கள் தேவை. விஸா மற்றும் அனைத்துவிதமான சலுகைகளும் இலவசம். உடனே தொடர்பு கொள்ளவும் . கீழ்கண்ட 

கத்தார் நாட்டுக்கு ஆட்கள் தேவை

டெல்லி குண்டுவெடிப்பு: குவியும் இமெயில்கள்


டெல்லி : டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்பு தொடர்பாக மூன்றாவதாக வந்துள்ள இமெயிலில் குஜராத்  மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஹுஜி தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக முதலில் ஒரு இமெயில் அனுப்பப்பட்டது. அந்த இமெயில் காஷ்மீரிலிருந்து வந்ததை அறிந்த அதிகாரிகள் சிலரை விசாரித்து கைது செய்தனர்.

இஸ்ரேலால் மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்கு ஆபத்து


ஜெருசலம் : லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லா அமைப்பு மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு அடியில் இஸ்ரேல் பூமியைத் தோண்டுவதால் அல் அக்ஸாவிற்கு ஆபத்து என அல்-ஊதில் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன் அன்று வெளியிடப்பட்டுள்ள ஹிஸ்புல்லாவின் அறிக்கையை சுட்டி காட்டி பிரஸ் டிவி நிரூபர் கூறியுள்ளதாவது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த அகழ்வானது முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் முஸ்லிம் உலகத்தின் தனித்துவமிக்க சின்னமான மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு பெரிய ஆபத்தாக அமையும் எனக் கூறியுள்ளது.

சட்டவிரோத வெடிப்பொருட்கள் பறிமுதல் – மகாராஷ்டிரா முதல் இடம்


டெல்லி : இந்த வருட துவக்கத்திலிருந்து ஜூலை மாதம் வரை மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 12,667 கிலோ சட்டவிரோத வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல், காஷ்மீரில் மட்டும் 2,796 சட்ட விரோத ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து அமைச்சர் எம்.ராமச்சந்திரன் தெரிவிக்கையில், மகாராஷ்டிராவை தொடர்ந்து ராஜஸ்தானில் 11,728 கிலோ, ஆந்திராவில் 7,269 கிலோ என சட்டவிரோத வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.

டெல்லி குண்டுவெடிப்பு மிருகத்தனமானது – அப்சல் குரு


டெல்லி : கடந்த புதனன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு கோழைத்தனமானது மட்டும்மல்லாமல் மிருகத்தனமானது என்பதாக பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது டெல்லி சிறையில் வாடிவரும் அப்சல் குரு கூறியுள்ளார்.

எந்த ஒரு மதமும் அப்பாவிகளை கொலைச் செய்ய கூறுவதில்லை என்று கூறியுள்ள அப்சல், இதில் என் பெயரை சமந்தப்படுத்துவது என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தாருல் உலூம் மதரஸாவிடம் நட்பு பாராட்ட விரும்பியது – விக்கிலீக்ஸ்


லக்னோ : கடந்த 2008-ஆம் வருடம் 25 ஆம் தேதி நடந்த மாநாட்டில் தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரான செயல் என பத்வா கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தாருல் உலூம் தேவ்பந்திற்கு கல்வி உதவிகள் மற்றும் சர்வதேச நிகழ்சிகளுக்கு அழைப்பு கொடுப்பதின் மூலம் தெற்கு ஆசியாவில் அமெரிக்க ஆதரவைப் பெற ஏதுவாக அமையும் என நினைத்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கம்பிவட தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

Time Management – நம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்!


நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? என்பதற்கான டிப்ஸ் பற்றி கீழே காணலாம்.

இமாம்களின் தியாக சுவடுகள்


அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றிருக்கும் நாம் அந்த மார்க்கத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து கொள்ள வேண்டும். இந்த மார்க்கம் எவ்வாறு நம்மை வந்தடைந்ததுஇந்த மார்க்கத்திற்கும் நமக்கும் மத்தியிலுள்ள தொடர்புகள் எவ்வாறு அமையவேண்டும்என்பதையெல்லாம் நாம் புரிந்துக் கொண்டால் தான் இந்த மார்க்கத்தை முழுமையாக நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியும்.