நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

பரமக்குடியில் கலவரம் – துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி


பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜான்பாண்டியன்  கைதால் பரமக்குடியில் இன்று பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 2 போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான் பாண்டியன் தூத்துக்குடியிலிருந்து கிளம்பினார். அப்போது வல்லநாடு பகுதியில் அவரை போலீஸார் தடுத்து தூத்துக்குடி கொண்டு சென்றனர். அவர் கைதும் செய்யப்பட்டார்.
இதையடுத்து பரமக்குடியில் கூடியிருந்த ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கினர். ஐந்து முக்கு சாலையில் சாலை மறியலில் குதித்த அவர்கள் போலீஸார் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பாட்டில்களையும், கற்களையும் வீசி போலீஸாரைத் தாக்கினர். மேலும், அந்தப் பகுதி வழியே வந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.2 போலீஸ் வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தினர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர். அப்படியும் கூட்டத்தினர் கலையவில்லை. இதையடுத்து கண்ணீப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அப்படியும் கூட்டம் கலையாமல் தொடர்ந்து பெரும் தாக்குதலில் இறங்கியதால் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் கூட்டத்தினர் கலைய மறுத்து தொடர்ந்து தாக்குதலில் இறங்கியதால் போலீஸார் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் பரமக்குடியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.