ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு இரு மதத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
காமன் தாலுகாவில் பரத்பூரில் இந்த சம்பவம் நடந்தது. பாரத்பூரின் கோபால்கர் கிராமத்தில் ஒரு மயான பூமி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை பின்னர் மத மோதலாக மாறியது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு வரை குஜ்ஜர் சமூகத்தினரும், முஸ்லீம்களும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 9 பேர் பலியாயினர். பல கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் போலீஸ் படைகள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து அங்கு அமைதி திரும்பியுள்ளது.