புதுதில்லி : 2002ம் ஆண்டு நடந்த குல்பர்க் சொசைட்டி கலவர வழக்கை மேற்கொண்டு விசார்ப்பதற்கில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று திங்கள்கிழமை முடிவு செய்தது. இதனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தலைவலி தற்காலிகமாக நீங்கியதாகக் கருதப்படுகிறது.
இறுதி அறிக்கையை கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
இறுதி அறிக்கையை கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு இதை எடுத்துச் செல்லுமாறும், இதை தங்களிடம் இருந்து விடுவித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், 2002 கலவரம் தொடர்பாக நரேந்திர மோடியை குற்றம் சாட்டி அறிவிக்கவும் அது மறுத்துவிட்டது.
கடந்த 2002ஆம் வருடம் பிப்ரவரி 28 அன்று அகமதாபாத்தில் நிகழ்ந்த இந்தக் கலவரத்தில் காங்கிரஸ் எம்பி எசன் ஜாப்ரி உள்பட 69 பேர் இறந்தனர். குஜராத் கோத்ராவில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டதை அடுத்து, இந்தக் கலவரம் பரவியது. கோத்ரா ரயிலில் பயணம் செய்த கரசேவகர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால் கோபமடந்த இந்துக்கள் தெருக்களில் இறங்கி கலவரத்தில் இறங்கினர் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது. சிபிஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே.ராதவன் தலைமையில் இந்தக் குழு இயங்கியது.
உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட எசன் ஜாப்ரியின் மனைவி ஸாகியா ஜாப்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் வழக்கு நடந்து வந்தது.
2009 ஏப்ரல் 27ல் உச்சநீதிமன்ற சிறப்பு நீதிமன்றம், குல்பர்கா சொசைட்டி படுகொலை விசாரணையில் முன்னேற்றமில்லை என்று கூறி ஸாகியா ஜாப்ரி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நீதிமன்றம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.