புதுடெல்லி : குஜராத் கலவரத்தில் தங்களின் குடும்பத்தினர் தன்னுடைய கண்ணெதிரே கொடூரமாக கொலைச் செய்யப்பட்டதை நேரில் கண்டவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் நடக்கும் கலவரம் தொடர்பான வழக்கில் எதிர்பார்ப்பு அதிகம்.
ஏனெனில் குல்பர்க் கூட்டுப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஒன்பது வருடங்களாக நீதிவேண்டி காத்து கிடக்கின்றனர். இதில் இம்தியாஸ் பதான் என்பவரும் ஒருவர். இவர் தன்னுடை எட்டு குடும்ப உறப்பினர்களை தன் கண்முன்னே பலி கொடுத்தவர்.குஜராத் முதல்வர் நர மோடிக்கு எதிராக இவ்வழக்கில் சாட்சி சொன்னவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2002 பிப்ரவரியில் நடைபெற்ற குஜராத் கலவரத்தின் கொடூரத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் விடுபட முடியாமல் உள்ளார். அக்கலவரத்தில் தன்னுடைய தாய் உட்பட தன் குடும்பத்திலிருந்து எட்டு நபர்களை குல்பர்க் கூட்டுப் படுகொலையில் பலி கொடுத்தள்ளார்.
இம்தியாஸ் போன்று சிலர் மட்டுமே நீதிமன்றம் சென்று தாங்கள் குல்பர்கில் கொலைச் செய்யப்பட்ட இஹ்சான் ஜாஃப்ரி நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து உதவி கேட்டதை நேரில் கண்டதாக கூறியவர்கள். ஆனால் எந்தவித உதவியும் மோடியால் வழங்கப்படவில்லை.
மேலும் இது குறித்து இம்தியாஸ் கூறியுள்ளதாவது; ஜாப்ரி அவர்கள் உதவி கேட்டு நரேந்திர மோடியை அழைத்ததாக கூறினார். அதற்கு நான் மோடி என்ன பதில் கூறினார் என்று வினவினேன் அதற்கு ஜாஃப்ரி அவர்கள் மோடி உதவி செய்தவதற்கு பதிலாக குற்றம் சாட்டுவதாக கூறினார் என்றார்.
அதனால் மனம் உடைந்து போன ஜாஃப்ரி அவர்கள் கலவரக்காரர்களிடம் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் ஆனால் பெண்களையும் குழந்தைகளையும் விட்டு விடுங்கள் என்று கேட்டார். ஆனால் நான்கு பேர் உள்ளே புகுந்து அவரை ரோட்டில் வைத்து வெட்டி கொன்றனர் என்று கூறினார்.
இவ்வழக்கில் நர மோடி உட்பட போலிஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் மற்றும் சங்க பரிவார கும்பலைச் சேர்ந்தவர்கள் என 61 பேர் மீது வழக்கு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நீதிக்காக காத்திருக்கும் இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி நிச்சயமாக தனக்கு நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் இம்தியாஸ் கூறியுள்ளதாவது; உச்ச நீதிமன்றத்தால் மோடி தண்டிக்கப்படுவார் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார். இம்தியாஸ் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களில் நீதிக்காக காத்திருக்கும் நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.