நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 15 செப்டம்பர், 2011

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பாரபட்சமின்றி ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் :SDPI


SDPI-ன் மாநிலத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் பின்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் 

தமிழக அரசு செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வருடங்களில் 7 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் . அப்போது 10 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மாத்திரம் பாரபட்சத்துடன் விடுதலை மறுக்கப்பட்டது.
தற்போது அவர்கள் 13 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் குடும்பதினர் சொல்லமுடியாத துயரத்திலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வருகின்றனர் .

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கருணை உள்ளத்துடன் பரிசீலித்து வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 7 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் .

அதில் முஸ்லிம் ஆயுள் கைதிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்து முந்தைய அரசு செய்த அநீதியை துடைத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்