ஜமுனாநகர் : முஸ்லிம்களும், ஹிந்து மக்களும் வாழும் கிராமத்தின் உள்ளே மசூதி கட்ட ஹிந்துத்துவவாதிகள் பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் ஒரு சரியான தீர்வை தரவில்லை என்றாலோ அல்லது மசூதி கட்ட அனுமதி மறுக்க பட்டாலோ நாங்கள் இந்த கிராமத்தை விட்டு வலுக்கட்டயாமாக வெளியேறும் நிலையில் உள்ளோம் என்று மாவட்ட நிர்வாக கமிட்டியில் பங்கெடுத்துக் கொண்ட தில்ஷான் மற்றும் சஹாபுதீன் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் இங்கு நிகழும் சில ஒழுகிங்கினமற்ற அடிப்பட தத்துவங்களும், மனிதாபிமானமற்ற செயல்களும் எங்களை பயமுறுத்துகிறது. நாங்கள் மொத்த ஹிந்து மதத்தையும் குற்றம் கூறவில்லை, ஆனால் சிலர் எங்களையும், நாங்கள் வாழும் வீட்டையும் குறி வைப்பதே நாங்கள் இந்த கிராமத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளுகிறது என்றும் தெரிவித்து உள்ளனர்.