புதுடெல்லி : சமீபத்தில் நடந்த டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லபட்டும், 90-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, பல மின்னஞ்சல்கள் வந்த வண்ணமாக உள்ளன.
இந்நிலையில், உள்நாட்டுச் செயலாளர்; “ஆர்.கே.சிங், இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் குற்றவாளிகள் மட்டுமே அனுப்பி இருப்பார்கள் என்று சொல்ல இயலாது, எங்களுக்கு வரும் அனைத்து மின்னஞ்சல்களும் தகுந்த முறையில் நாங்கள் பெற்றாலும், இது போல் கலவரத்திற்கு பொறுப்பேற்று வரும் மின்னஞ்சல்கள், அதனை செய்தவர்கள் தான் அனுப்பி இருப்பார்கள் என்று நம்ப முடியாது,இந்த குண்டுவெடிப்பை காதில் கேள்வியுற்றவர்கள் கூட அனுப்பி இருக்கக் கூடும்.” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.