நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 15 செப்டம்பர், 2011

பசி, பட்டினியில் தவிக்கும் சோமாலியாவில் தினமும் 100 பேர் பலியாகும் பரிதாபம்

நைரோபி: சோமாலியாவில் பசி மற்றும் பட்டினியில் வாடும் மக்களில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பலியாவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பட்டினியில் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இறந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என தெரிகிறது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனிதநேய அமைப்பினர் கூறியதாவது, சோமலியாவில் 50 சதவீதம் மக்கள் பசி மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோமாலியாவின் 6 மண்டலங்ளில் பஞ்சம் பரவி, ஒரு நேர உணவு கூட கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

இதில் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர். பெண்களுக்கு சரியான உணவு கிடைக்காததால், பிறக்கும் போதே குழந்தைகள் ஊட்டச் சத்து குறைப்பாடு கொண்டே பிறக்கின்றன. இதனால், இறந்தவர்களை புதைக்க கூட ஆட்கள் இல்லாமல் பிணங்கள் ஆங்காங்கே கிடக்கின்றனர்.

பட்டினியில் தவித்த ஆயிரக்கணக்கானோர் அருகிலுள்ள கென்யா நாட்டிற்கு இடபெயர்ந்து வருகின்றனர். ஆனால், கென்யா எல்லை பகுதியில் வாழும் சிலர், தங்குவசதி, உணவு, குடிநீர், சுகாதாரம் என எதுவும் இல்லாமல் தவிக்கின்றனர்.

இதேபோல அடுத்துள்ள மற்ற நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக எந்த வசதிகளும் இல்லாமல் தங்கியுள்ளனர். பட்டினி மற்றும் சுகாதார குறைப்பாடு மக்களில் 75 சதவீதம் பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காலரா நோயை பரவ செய்துள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 30,000 மக்கள் இறந்துள்ளனர். சோமாலியாவின் தென்பகுதியில் வசிக்கும் 30 லட்சம் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர், என்றார்.