தமிழகத்தில் தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனை கைது செய்ததாக செய்தி பரவியதையடுத்து பரமக்குடியில் ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரம் திங்கள்கிழமை நடைபெற இருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இந்த விவகாத்தை கையில் எடுத்து துப்பபாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.