நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

மலேசியா : மதக்கலவரம் ஏற்படும் அபாயம்

மலேசியாவில் முஸ்லிம் அதிகாரிகள் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். இதை தொடர்ந்து இரு மதங்களை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. 


மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இவரிகளில் 60 சதவீதத்தினர் முஸ்லிம்கள் ஆவார்கள். மற்றவர்கள் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பவுத்தர்கள் எனப்படும் பிற மதத்தினர் ஆவார்கள்.




முஸ்லிம்களை தங்கள் மதத்துக்கு மாற்ற முயற்சி செய்து வரும் கிறிஸ்தவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரி வருகிறார்கள்.

மதம் மாற்றுவது அந்த நாட்டில் சட்டவிரோதம் ஆகும். கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கிறிஸ்தவர்கள் வருந்துகிறார்கள்.

இந்த இருபிரிவினருக்கும் இடையே ஏற்பட்டு உள்ள மோதல் காரணமாக அது பிரதமர் நஜீப்பின் வெற்றியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தல் 2013-ம் ஆண்டு நடக்க இருக்கிறது.