பேரறிஞர் அண்ணா 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று இரவு (15.9.2011) மதிமுக திறந்தவெளி மாநாடு நெல்லை சீமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், பேராசிரியர் பெரியார்தாசன் உட்பட பலர் இந்த மாநாட்டில் சிறைப்புரையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், பேராசிரியர் பெரியார்தாசன் உட்பட பலர் இந்த மாநாட்டில் சிறைப்புரையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் மூன்று தமிழர்களின் உயிர்காக்க, ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உறுதி, முல்லைப்பெரியாறு அணை, தமிழீழமே தீர்வு, கட்சத்தீவு மீட்பது, விலைவாசி கட்டுப்பாடு, கூடன்குளம் அணு உலையை மூடவேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.தாய்தமிழகத்தில் தரணி எங்கும் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் கடந்த 25ம் தேதி வெளியான செய்தி வேதனையை கிளப்பியது. பேரறிவாளன், முருகன், சாந்தன் இவர்களின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
2.மதிமுக கடந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தன் நிலைப்பாட்டில் உறுதியான மதிமுக உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மையான திறமையான ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதற்கு உறுதி கூறுகிறது. எனவே, மதிமுகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
3. தென் தமிழ்நாட்டின் வாழ்வாதரம் முல்லைப்பெரியாறு அணை. சென்னை அரசாங்கத்திற்கும், திருவிதாங்கூர் அரசாங்கத்திற்கும் ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி தமிழக உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரள அரசு அணை வலுவிழந்தது என்று சொல்லி நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைத்தது.
இதனால் தமிழ்நாட்டில் 2 லட்ச ஏக்கம் நிலங்கல் பாதிப்புக்கு உள்ளாகின. கேரள அரசு அணைய உடைக்க முயற்சித்து வருகிறது.
அணை பாதுகாப்பு ஆணையம் அண்மையில் எடுத்துள்ள முடிவு இந்தியை ஒருமைப்பாட்டுக்குஎதிரானது. என கண்டனம் தெரிவிக்கிறது.
4. இலங்கையின் தமிழ் தேசிய இனம் உரிமையோடும், கண்ணியத்தோடும், வாழ்வதற்கு தமிழினத்தின் இறையாண்மையை அங்கீகரித்து தனித்தமிழ் ஈழநாடு அமைவது ஒன்றேநிரந்த தீர்வு ஆகும் என்று மதிமுக கடந்த 16 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் வாழும் தமிழினம் தமது அரசியல் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட அறவழியில் போராடியபோது பெரும்பாண்மை சிங்கள இனத்தான் தமிழர்களின் உரிமை போராட்டங்கள் நசுக்கப்பட்டன.
தமிழர்கள் அடிமைப்போல் அடைக்கப்பட்டு சித்திரவதைக்க்கு உள்ளாகினர். மொத்தத்தில் இலங்கையில் தமிழ் மகக்ள் அடையாளம் அழிக்கப்படுவிட்டது. இலங்கை தமிழர்களின் உரிமையையும், வாழ்வையும், சுயமரியாதையையும் நிலைநாட்ட வேண்டுமானால் சுதந்திர தமிழ் ஈழமே தீர்வாகும்.
- என்பன உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.