நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

9/11 சம்பவத்தை காரணம் காட்டி உய்குர் முஸ்லிம்களை சிறையிலடைக்கும் சீனா


பெர்லின் :  9/11 சம்பவத்தைக் காரணம் காட்டி ஷின்ஜியாங் பகுதியில் ஏழாயிரம் பேரை சீன அரசு சிறையில் தள்ளியுள்ளதாக “உலக உய்குர் காங்கிரஸ்” அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ஷின்ஜியாங் பகுதி. இங்கு உய்குர் முஸ்லிகள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் கம்யூனிஸ்ட் சீன அரசில் ஹான் சீன இனத்தவர் இங்கு அதிகளவில் குடியேற்றப்பட்டனர். இதனால் இரு இனத்தவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
அதோடு உய்குர் இனத்தவர் வாழும் பகுதியைத் தனி நாடாக பிரிக்க வேண்டும் எனக் கோரி “கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்” என்ற அமைப்பும் துவக்கப்பட்டது. சீனாவால் பயங்கரவாத அமைப்பு என அது தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜெர்மனியில் செயல்பட்டு வரும் “உலக உய்குர் காங்கிரஸ்” அமைப்பின் தலைவர் ராபியா காதீர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உய்குர் இனத்தவர் பகுதிகளில் அமைதியான முறையில் நடக்கும் அரசியல், சமூக, கலாசார நிகழ்வுகளைக் கூட 9/11  சம்பவத்தைக்  காரணம் காட்டி சீன அரசு அடக்கி வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறி கடந்த 10 ஆண்டுகளாக உய்குர் இனத்தவரின் கோரிக்கைகளை ஏற்க சீன அரசு மறுத்து வருகிறது. சீனாவில் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் உய்குர் போராட்டங்களுக்கு மட்டும் அரசு “பயங்கரவாதம்” என முத்திரை குத்துகிறது.
கடந்தாண்டு மட்டும் உய்குர் இனத்தவர் 1,000 பேர் மீது அமைதியைக் குலைக்க முயற்சித்ததாக கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2001ல் இருந்து இன்று வரை 7,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.