பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியின் படைகள் லிபியாவை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த காலகட்டத்தில் தனது முதுமையான வயதிலும் கூட லிபிய மக்களின் விடுதலைக்காக இத்தாலிய படையை எதிர்த்து போரிட்டு ஷஹீதான உமர் முஃக்தார் அவர்கள் பிறந்த தினம் செப்டம்பர் 16.
உமர் முஃக்தார் (1862 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.
சிறு வயது வாழ்க்கை
16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.
இத்தாலி- துருக்கி யுத்தம்
1911- ஒக்டோபர் மாதம் இத்தாலி- துருக்கி யுத்த காலம் அது. அட்மிரல் லுயிஜி பராவெல்லியின் தலைமையில் சென்ற இத்தாலிய கடற்படை அணி லிபிய கரையோர கிராமத்தைக் கைப்பற்றியது. “லிபியர்களே! உடனடியாக சரணடையுங்கள். இல்லையேல் திரிப்போலி நகரைத் துவம்சம் செய்துவிடுவோம்.” என அட்மிரல் பராவெல்லி கூறினான்.லிபியர்கள் சரணடையவில்லை. மாறாக, தலைநகரைவிட்டு வேறிடங்களுக்கு மறைந்தனர். விளைவு 3 நாட்களாக முசோலினியின் படை திரிப்போலியின் மீது குண்டு மாரி பொழிந்தது. திரிப்போலிடேனியன்ஸ் என்ற பெயரில் ஒரு புது பிரகடனத்தை இத்தாலி வெளியிட்டது.
இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.
உமர் முஃக்தார் அவர்களை இத்தாலிய படைகள் கைது செய்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் |
உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உமர் முஃக்தார் அவர்களின் தியாக வரலாறு அற்புதமானவை. இன்று நமது இந்திய தேசத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் அந்நிய சக்திகளிடம் அடகுவைக்கும் நிலை இருந்து வருகிறது. உமர் முஃதார் அவர்களைப் போன்று இந்தியாவிலும் உலமாக்கள் மன உறுதியுடன் அந்நிய சக்திகளை எதிர்த்து போராடுவதற்கு முன்வர வேண்டும்.