புதுடெல்லி: கர்நாடகாவை சேர்ந்த முஹம்மத் ஜரார் சிதிபாபா என்பவர் ‘தி ஹிந்து’ தினசரி நாளிதழின் தலைமை நிரூபர் என்.ராம் மற்றும் செய்தியாளர் பிரவீன் சுவாமி மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெளிவந்த ஹிந்து செய்திதாளின் முதல்பக்கத்தில் ‘தலைமறைவான இந்திய முஜாஹிதீன் தலைவர் அலியாஸ் யாசின் பட்கல் 2005-ஆம் ஆண்டின் நகர்ப்புறங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதாகவும் காவல்துறையால் தேடப்பட்டு வந்த இவர் 2010-ல் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களில் மூலம் தங்கள் ஜிஹாத் இயக்கத்தை மீண்டும் புதுப்பித்ததாகவும் இவரது இயற்பெயர் முஹம்மத் ஜரார் சிதிபாபா’ என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.












