நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 20 டிசம்பர், 2011

எஸ்.டி.பி.ஐ எழும்பூர் தொகுதி சார்பாக அடையாள உண்ணாவிரதம்




கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக அகற்றக்கோரியும், முல்லை பெரியார்  அணை  விவகாரத்தில் உச்ச நீதி மன்ற ஆணையை உடனடியாக அமல்படுதக்கோரியும் மத்திய அரசைக்கண்டித்து ஒரு நாள்  அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது 
சோசியல் டெமாக்ரடிக் கட்சி  தென் சென்னை மாவட்டம்எழும்பூர்  தொகுதி  சார்பாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக அகற்றக்கோரியும், முல்லை பெரியார்  அணை  விவகாரத்தில் உச்ச நீதி மன்ற ஆணையை உடனடியாக அமல்படுதக்கோரியும் மத்திய அரசைக்கண்டித்து  17.12.11 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள்  அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ - யின்   எழும்பூர்  தொகுதி  தலைவர்   A.M.A அஹமது அலி அவர்கள் தலைமை தாங்கினார்.  எழும்பூர் தொகுதி செயலாளர் நாகூர் கனி மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.   எஸ்.டி.பி.ஐ - யின் தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் அஹமது பாஷா  அவர்கள் உண்ணா விரதத்தை துவங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக P.U.C.L -அமைப்பின்  உறுப்பினர் WIN T.V புகழ் T.S மணி அவர்கள் கலந்து கொண்டார்.  

எஸ்.டி.பி.ஐ - யின்   எழும்பூர்  தொகுதி  தலைவர் அஹமது அலி அவர்கள் தனது உரையில் அணுமின் நிலையம் என்பது மனித உயிர்களை காவு வாங்கும் கூடாரம் என்றும்,  மத்திய அரசின் கூடங்குளம் அணு மின் நிலையம்  அமைப்பது கண்களை விற்று சித்திரம் வரைவதை போன்று உள்ளது என்றும், மின்சார தேவைகளுக்காக மனித உயிர்களை விலை பேசுவது எந்த விதத்தில் நியாயம்; ஆகவே மனித உயிர்களை காவு வாங்கும் கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் முல்லை பெரியார் அணை விவகாரத்தில் மொழி, இன வெறியை தூண்டும் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்க்கிறோம்;  கண்டிக்கின்றோம்.  இவ்விவகாரத்தில்  கேரள அரசின் செயல்பாடு, உள்நோக்கம் கொண்ட  குறுகிய மனப்பான்மையை  வெளிப்படுத்துகிறது, அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்,  இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஆணையை உடனே நிறைவேற்றி இரு மாநில மக்களிடையே நட்புறவை ஏற்படுதுமாறு மத்திய அரசை  கேட்டுக்கொள்கின்றோம். 

P.U.C.L -அமைப்பின்  உறுப்பினர் WIN T.V புகழ் T.S மணி அவர்கள் தனது உரையில் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டம் என்பது இன்றைய நேற்றைய போராட்டம் அல்ல; நாங்கள் 1987-ஆம் வருடம் முதல் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.  ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட பொது அனைத்து அணு மின் நிலையங்களையும் பாதிப்புக்குள்ளாக்கி  , அனுக்கசிவுகளை ஏற்ப்படுத்தியது, மனித உயிர்களுக்கு அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியது . அது முதல் அந்நாடு இனி நமக்கு அணு மின் நிலையம் வேண்டாம் என்று, மாற்று திட்டங்களை ஆராய்ந்து வருகின்றது. மேலை நாடுகளும், வளர்ந்த நாடுகளும்கூட பல வருடங்களுக்கு முன்பே புதிய அணு மின் நிலையங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இருக்கக்கூடிய அணுமின் நிலையங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த கூடங்குளம் அனுமின்னிலய்ம் பல்லாயிரக்கணக்கான   தமிழக, கேரள மக்களை துயரத்தில் ஆழ்த்தி வருகின்றது. இந்நிலையில் பிரதமரின் ரஷ்ய பயணம் மற்றும், அவர் கூறிய பொறுப்பற்ற  கருத்துக்கள் மக்களை பெரும் நிராசையில் ஆழ்த்தி வருகின்றது. ஆகவே மனித உயிரகளுக்கு கேடு விலை விக்கும், மனித உயிர்களை கொல்லும் இந்த கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே நிரந்தரமாக மூடி மக்களுக்கு நிம்மதியை வழங்க வேண்டுமென மத்திய  அரசை கேட்டுக்கொண்டார். மேலும் முல்லை பெரியார் அணை விவகாரத்தில், தேவையில்லாத ஊகங்களை பரப்பி, நட்புணர்வோடு வாழ்ந்து வந்த கேரளா-தமிழக மக்களை மோதிக்கொல்லுமாறு  செய்த கேரள அரசின் குறுகிய செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம். மத்திய அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிட்டு உச்ச நீதிமன்ற ஆணையை உடனே அமல்படுத்தி அமைதியை நிலை நாட்டுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அடித்தட்டு அளவில் இந்த போராட்டத்தை கொண்டு செல்லும்  எஸ்.டி.பி.ஐ - யின் நிர்வாகிகளையும், இந்த உண்ணாவிரத்தில் கலந்து அனைத்து செயல்வீரர்களையும், பொது மக்களையும் வெகுவாக பாராட்டினார். 

மேலும் எஸ்.டி.பி.ஐ - யின் வடசென்னை மாவட்ட பொது செயலாளர் E. அப்துல் ரஷீத் அவர்கள், எஸ்.டி.பி.ஐ - யின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் சாகுல் ஹமீது, அனீஸ் முஹம்மது,  வடசென்னை மாவட்ட செயலாளர்கள் கரீம், ஜமால் முஹம்மது அவர்களும், எஸ்.டி.பி.ஐ - யின் பல்வேறு தொகுதி நிர்வாகிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். உண்ணா விரத அமைப்பாளர்களையும், கலந்து கொண்டவர்களையும் வெகுவாக  பாராட்டினர். 

இறுதியாக எஸ்.டி.பி.ஐ - யின் தென் சென்னை மாவட்ட பொருளாளர் அஹமது ரிபாய் அவர்கள் கலந்து கொண்டு உண்ணா விரதத்தை நிறைவு செய்தார். எஸ்.டி.பி.ஐ - யின் 61-வது வார்டு தலைவர் ராஜா முஹம்மது அவர்கள் நன்றியுரையாற்றினார்.   இந்த உண்ணாவிரதம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.