புதுடெல்லி : இந்தியாவின் எட்டு மாநிலங்களில் மனித உரிமை கமிஷன்கள் ஏற்படுத்தாமல் உள்ளன என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் மாநிலங்களவையில் கூறியுள்ளார்.
அருணாசலப் பிரதேசம், கோவா, ஹரியாணா, மேகாலயா, மிஷோரம், நாகாலாந்து, திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள், மனித உரிமை கமிஷனை ஏற்படுத்தாமல் உள்ளன.
அந்த மாநிலங்களில் உடனடியாக மனித உரிமை கமிஷனை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமை கமிஷன் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.