கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 3ம் தேதி மதுரையில் காந்தி மியூசியம் அரங்கில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Dr. சங்கீதா வரவேற்புரையாற்றினார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் Dr. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் நிறுவனர் டேவிட், அரசியல் குழு ஒருங்கிணைப்பாளர் மனோ. தங்கராஜ், பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப், SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பல்வேறுமாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட அணு உலை எதிர்ப்பியக்க ஆர்வலர்களும், கட்சிகள் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகளும் இதில் உரையாற்றினர். அணு உலை எதிர்ப்பியக்க போராட்டத்தை மாநில அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.