தமிழக அரசு மின்சார வாரியத்தை விரிவுபடுத்தி நவீனமயமாக்கி வருகிறது. இதன் முதல் கட்டமாக அனைத்து நிலையங்களையும் ஒன்றாக இணையம் மூலம் இணைத்துள்ளது. தற்போது நாம் தமிழகம் முழுவதும் எந்த மின்சார கட்டணம் வசூலிக்கும் நிலையத்திலும் நமது கட்டணத்தை செலுத்தலாம்.
இணையம் மூலமாக மின்சார கட்டணம் செலுத்தும் முறையை அரசு அமல்படுத்தியுள்ளது. வேலைக்கு செல்வோரையும், முதியவர்களையும் கவனத்தில் கொண்டு இந்த வரவேற்க வேண்டிய சேவையை துவங்கியுள்ளது.
தமிழக மின்சார வாரியம்: www.tneb.in
தமிழக மின்சார வாரிய நிறுவனம்: www.tnebltd.gov.in
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்: www.tangedco.gov.in
மின் தொடர் அமைப்பு கழகம்: www.tantransco.gov.in
மேற்குறிப்பிட்டுள்ள இணைய தளங்கள் மூலம் மின் கட்டண விவரம் அறிதல், மின் கட்டணம் செலுத்துதல், புகார் பதிவு செய்தல், மற்றும் அதிகாரிகளின் தொடர்பு எண்களையும் அறிய முடியும்.