நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 20 டிசம்பர், 2011

SDPI ன் மாநில செயற்குழு திருச்சியில் நடைபெற்றது


௨௦ டிசம்பர், ௨௦௧௧

 
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் 17.12.2011 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு திருச்சி மாவட்ட SDPI அலவலகத்தில் வைத்து நடைபெற்றது.  மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் எஸ். முஹம்மது முபாரக், மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்களின் ராஜினாமாக கடிதம் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு, மாநில செயற்குழு உறுப்பினராக தொடர்வார் என தீர்மானிக்கப்பட்டது. 

புதிய மாநில செயலாளருக்கான தேர்தல் நடத்தப்பட்டு மதுரை மாவட்ட பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் கே. செய்யது இப்ராஹிம் அவர்கள் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து அனைத்து மாவட்டங்களின் பணிகள் மீளாய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து நிர்வாக ரீதியான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இறுதியாக மாநில செயலாளர் ஜி. அப்துல் சத்தார் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

1) முல்லைப் பெரியாறு விவகாரம் சம்பந்தமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி 142 அடி அளவிற்கு நீரை தேக்கும் வகையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துவதோடு இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்படட்டு மக்களிடம் அவதூறு பிரச்சாரம் செய்து மக்களை தூண்டிவிட்டு இரு மாநில மக்கள் மோதுகிற வகையிலும், இருமாநில உறவுகள் பாதிக்கும் வகையிலும் செயல்பட்டு வரும் கேரள அரசையும் இவ்விவகாரத்தில் மௌனம் காத்து பிரச்சனையை சிக்கலாக்கும் மத்திய அரசையும் இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. 

2) கூடங்குளத்தில் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளது. தற்போது அதற்கெதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி வருகிறது.  

 அணு உலைகள் ஆபத்தானவை. அதனால் ஏற்படும் பாதிப்புகள கணக்கிட    முடியாதவை. 

இதை கடந்த மார்ச்சில் ஜப்பான் நாட்டில் புகுஷிமாவில் ஏற்பட்ட அணுஉலை விபத்துக்குப்பின் உலக நாடுகள் உணர்ந்ததால், உலகின் பல நாடுகள் தங்களது நாடுகளில் அணு உலைகளை மூடிவிடப் போவதாகவும், புதிய அணு உலைகளை தொடங்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ள நிலையில் மத்திய அரசு கூடங்குளம் அணு உலையை செயல்படுத்தியே தீருவோம் என செயல்படுவது கண்டனத்திற்குரியது. 

உலகம் முழுவதும் அணு உலைகளுக்கெதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் கூடங்குளம் அணு உலைக் கெதிரான போராட்டங்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது சரியல்ல.

தன்னெழுச்சியாக நடைபெறுகிற மக்கள் போராட்டங்களின் கோரிக்கையை ஏற்று கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடிவிட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3) மக்கள் நலப்பணியாளர்கள் வேலை நீக்கம் செய்த விவகாரத்தில் மீண்டும் அவர்களை வேலையில் சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழக அரசு அவர்களை வேலையில் சேர்த்து 13 ஆயிரம் குடும்பங்களின் கண்ணீரை துடைத்திட வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.