நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 20 டிசம்பர், 2011

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது!




கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது. இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதினால் மட்டும் முஸ்லிம்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. எல்லா முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென இச்செயற்குழு கூட்டம் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது.

மத்தியில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசாங்கம் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 27% இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டுமென தீர்மானித்துள்ளது. இதில் சில மாநிலங்களிலுள்ள முஸ்லிம்களும் இடம்பெறுகிறார்கள். இடஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு என்ற நிலை இல்லாததினால் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளும், உதவிகளும் சரியான அளவில் அவர்களை போய் சென்றடைவதில்லை. இவர்களுக்காக வழங்கப்படும் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, உயர்ஜாதியினருக்கும் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு இருக்க தென் இந்தியாவில் இருக்கக்கூடிய பல மாநிலங்களில் எல்லா பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தனியாக இடஒதுக்கீடு வழங்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களுக்கென தனி இடஒதுக்கீடு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு 8% இடஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும், 6% ஒதுக்கீட்டினை முஸ்லிம்களுக்கும் அளிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளது. ஆனால் இந்த முறை நியாயமான இடஒதுக்கீடு என்று கருதமுடியாது. எனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 13.7%மும், முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

இதையே தான் நீதிபதி ரங்கநாத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து முஸ்லிம்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பட்டியலில் சேர்க்க வேண்டும். காரணம் அரசால் நியமிக்கப்பட்ட சர்சார் கமிட்டி தனது விசாரணையின் முடிவில் இந்தியாவில் வாழக்கூடிய முஸ்லிம்களின் நிலை இதர பிற்படுத்தப்பட்ட இந்துக்களை விட மிக மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 


முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு கேரள மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் சுமூக நல்லுறைவை ஏற்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

கடந்த மாதம் புதுடெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டிற்கு எதிர்பார்ப்பையும் மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர். இதன் மூலம் அநீதிக்கு எதிராகவும், சமூக நீதியை அடைவதற்கான போராட்டக்களத்திற்கு தயாராகி வருவதையே காட்டுகின்றது.

வருகின்ற பிப்ரவரி 10-17 வரை தேசிய அளிவிலான சுகாதார வாரமாக கடைபிடித்து சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரச்சாரத்தை நடத்த இச்செயற்குழு தீர்மானித்துள்ளது.

இச்செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான்  தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கேம்.எம். ஷரீஃப் அவர்களை அறிக்கைகளை சமர்பித்து தீர்மானங்களை வாசித்தார். துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, செயற்குழு உறுப்பினர்கள் மெளலானா உஸ்மான் பேக், பேராசிரியர் கோயா, முஹம்மது ஷஹாபுதீன், யா முஹைதீன், வழக்கறிஞர் கே.பி. ஷரீஃப், ஹாமித் முஹம்மது, இலியாஸ் தும்பே, கரமனா அஷ்ரஃப் மெளலவி, ஓ.எம்.ஏ. ஸலாம், மெளலானா கலீமுல்லாஹ் சித்தீகி, முஹம்மது ரோஷன் மற்றும் ஏ.எஸ். இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.