NOV 2013
ஞாயிறு, 25 செப்டம்பர், 2011
சனி, 24 செப்டம்பர், 2011
ஒரிசாவில் கடும் வெள்ளம்: மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை
ஒரிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டம் பனிகோய்லி கிராமத்தைச் சூழ்ந்த வெள்ளத்தில் கால்நடைகளுடன் நடந்து செல்லும் கிராம மக்கள். நாள்: சனிக்கிழமை.
புதுதில்லி : ஒரிசா வெள்ளச் சேத மீட்பு பணிகளுக்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி உள்ளது.
ஒரிசாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல நகரங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் விரைவில் சட்டப் பிரிவு: தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா
நீதிபதி பஷீர் அகமது சையது பெண்கள் (எஸ்.ஐ.டி) கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற தேசிய சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபிபு
சென்னை : தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் விரைவில் சட்டப்பிரிவு தொடங்கப்படும் என்று அதன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா கூறினார்.
கடையநல்லூர் ஊராட்சி வார்டுகளுக்கான தேர்தல் அலுவலர்கள் நியமனம்
கடையநல்லூர் :- கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 12 ஒன்றிய வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்களின் வேட்பு மனுக்களைப் பெற தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கீழ்க்கண்ட அலுவலர்களிடம் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக ஆந்திரா உளவுத்துறையின் விஷமத்தனம்
ஐதராபாத்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல, இருந்த போதிலும் அரசாங்கமும் அதன் உளவு நிறுவனங்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தை போலவே கருதுகின்றனர். மேலும் பாப்புலர் ஃப்ரண்டை எப்படியாயினும் தடை செய்துவிட வேண்டும் என்றே கங்கனம் கட்டிக்கொண்டு திரிகின்றனர்.
9/11 தாக்குதல் அமெரிக்காவின் சொந்த சூழ்ச்சித் திட்டம் – ஐ.நா சபையில் ஈரான் அதிபர் ஆவேசப் பேச்சு
நியூயார்க்: ஐ.நா பொது சபையில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஈரான் அதிபர் முஹம்மத் அஹமத் நஜாத் ஆவேசமாக பேசினார்.
ஒசாமா பின்லாடனை கொன்று, அவர் உடலை கடலில் எறிந்த செயலை
கடுமையாக விமர்சித்த அவர், அது செப்-11 தாக்குதல் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்களை மூடி மறைப்பதற்க்காகத்தான் செய்யபட்டது என்றும் கூறினார்.
பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னால் வெளிநாட்டை சேர்ந்த வலது சாரி நிறுவனம் -சி.பி.ஐ
புதுடெல்லி: 1992-ல் நடைபெற்ற பாபர் மஸ்ஜித் இடிப்புக்கான பணம் அனைத்தையும் வெளிநாட்டைச் சேர்ந்த வலதுசாரி நிறுவனம்
வழங்கியிருப்பதாக ஒரு புதிய அறிக்கையை சிறப்பு புலானாய்வுக் குழு(சி.பி.ஐ) கண்டறிந்ததோடு, இந்த பணம் ஹவாலா ஊடகம் வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதில் அதிக அளவில் பணம் புலங்கப்பட்டு இருப்பதாகவும் சிறப்பு புலானாய்வு குழுவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை ‘பாபர் மசூதி அழிவுக்குப் பின்னால் உள்ள மக்கள் மற்றும் நிறுவனங்கள்’ என்ற பெயரில் இந்த மாதம் உள்துறை அமைச்சகத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும், இந்த சம்பவத்திற்குப் பின்னால் பத்துக்கும் மேற்ப்பட்ட குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லிபரான் கமிஷனின் அறிக்கையை உள்துறை அமைச்சகம் சிறப்பு புலானாய்வு குழுவிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையை முன் வைத்து சிறப்பு புலனாய்வு குழுவின் டி.ஐ.ஜி. நீர்ஜா கோத்ரு, அமலாக்க இயக்குனர்கள் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் உறுதுணையுடன் இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தை பற்றி விசாராணை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.
உற்சாகத்தை உறிஞ்சும் ‘கொர் கொர்’!
நாள் முழுவதும் உழைத்துக் களைத்தபின் உடல் எடுக்கும் ஓய்வே உறக்கம். ஒருசிலர் உடலை கீழே சாய்த்த உடன் உறங்கிவிடுவார்கள். ஒரு சிலருக்கு எளிதில் தூக்கம் வராது. அப்படியே தூங்கினாலும் அவர்களை அவ்வளவு எளிதில் எழுப்ப முடியாது. சிலர் அடித்து போட்டது போல் உறங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர். குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம்.
முஸ்லிம் என்பதற்காக பள்ளி மாணவனைத் தாக்கிய ஆஸி. இனவெறியர்கள்
சிட்னி: தான் ஒரு முஸ்லிம் என்பதற்காக உடன் பயிலும் சக மாணவர்கள் 20 பேர் தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கினர் என்று சிட்னி பள்ளி மாணவன் ஹமித் மாமோசாய் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர் ஹமித் மாமோசாய் (15). அவரை அதே பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர் ஹமித் மாமோசாய் (15). அவரை அதே பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
பூமியை நோக்கி விழும் செயற்கைக்கோளின் வேகம் குறைந்தது.. இன்று விழும்!
வாஷிங்டன் : கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா அனுப்பிய செயற்கைக்கோள் துண்டு, துண்டாக நேற்றி பூமியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் வீழ்ச்சி வேகம் குறைந்துவிட்டதால் இன்று விழவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு
மதுரை : தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கடும் கட்டுபாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கடும் கட்டுபாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













