காத்மாண்டு: நேபாளத் தலைநகர் காத்மாண்டுப் பள்ளத்தாக்கில் பனி மூட்டத்தில் சிக்கி சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானது. இதிலிருந்த விமான ஊழியர்கள் மூன்று பேர் உட்பட அதில் பயணம் செய்த 16 சுற்றுலா பயணிகளும் உயிரிழந்தனர்.
16 சுற்றுலாப் பயணிகளில் 12 பேர் இந்தியர்கள், இவர்களில் 8 பேர் தமிழர்கள், திருச்சியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் ஐரோப்பியர்கள்.
புத்தா ஏர் என்ற தனியார் விமானம் இதுபோல சுற்றுலாப் பயணிகளுக்கு எவரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிக் காட்டுவதற்காகக் கிளம்பியது. எவரெஸ்ட் உள்ளிட் பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் விமானம் காத்மாண்டுத் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது காத்மாண்டுப் பள்ளத்தாக்கில் உள்ள திடீரென பனி மூட்டத்தில் சிக்கி விமானம் விபத்துக்குள்ளானது.