தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஜெட் வேகத்தில் சென்று ஒரு பவுன் ரூ.21,800-யை தொட்டது. இதனால் ரூ.22 ஆயிரத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உயர்ந்து கொண்டிருந்த தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமானதாலும், சர்வதேச அளவில் பங்குகள் நிலையான தன்மையில் இருப்பதாலும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. இன்று தங்கம் விலையில் மேலும் வீழ்ச்சியை காண முடிந்தது. நேற்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.2,480-க்கு விற்கப்பட்டது. இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.51 குறைந்தது. காலையில் ஒரு கிராம் ரூ.2,429-க்கு விற்கப்பட்டது.
ஒரு பவுனுக்கு ரூ.408 குறைந்தது. இன்று காலை ஒரு பவுன் விலை ரூ.19,432-க்கு விற்பனையானது. நேற்று மாலை பவுன் ரூ.19,840 ஆக இருந்தது. பார்வெள்ளியின் விலை ரூ.51,580 ஆகும். 1 கிராம் ரூ.55.20.