கடையநல்லூர் : கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் சைபுன்னிஷா புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். புதன்கிழமை வரை தலைவர் பதவிக்கு 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சைபுன்னிஷா புதன்கிழமை தேர்தல் அதிகாரியான அப்துல் லத்தீப்பிடம் மனு தாக்கல் செய்தார். முன்னதாக கடையநல்லூர் தொலைபேசி நிலையத்திலிருந்து திமுகவினர் ஊர்வலமாகச் சென்று மனு தாக்கல் செய்தனர். வேட்பாளருடன் நகரச் செயலர் முகம்மது அலி, ஒன்றியச் செயலர் காசிதர்மம் துரை,இஸ்மாயில்,ஷேக் உதுமான்,முஸ்லிம் லீக் அமைப்புச் செயலர் நெல்லை மஜீத், தேசிய லீக் மாவட்டச் செயலர் கமருதீன் உள்ளிட்டோர் சென்றனர்.
புதன்கிழமை 17-வது வார்டு திமுக வேட்பாளர் விஸ்வாசுல்தான்,18-வது வார்டு திமுக வேட்பாளர் முகைதீன்பிள்ளை, 32-வது வார்டு திமுக வேட்பாளர் வகாப் உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.
4 பேர் மனு தாக்கல்: புதன்கிழமை வரை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்துள்ளவர்கள் விபரம்:சைபுன்னிஷா(திமுக), முகைதீன்பாத்து(திமுக மாற்று), அலிபாத்து(சுயே.),அப்துல்லாபேகம்(சுயே.).
4 பேர் மனு தாக்கல்: புதன்கிழமை வரை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்துள்ளவர்கள் விபரம்:சைபுன்னிஷா(திமுக), முகைதீன்பாத்து(திமுக மாற்று), அலிபாத்து(சுயே.),அப்துல்லாபேகம்(சுயே.).