நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

இஸ்லாமிய இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியின் சென்னை, ஈரோடு மேயர் வேட்பாளர்களாக SDPI வேட்புமனு தாக்கல்

select 3
சென்னை : தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் SDPI வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், SDPI,  விடுதலைச் சிறுத்தைகள், கிறிஸ்தவ
அமைப்புகள் ஆகியவை இணைந்து கூட்டணியாகவும்; திமுக, அதிமுக, காங்கிரஸ் பாமக, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தனித்தனியாகவும் தேமுதிக மற்றும் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.

இநிலையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில்  SDPI வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னையில் உள்ள ரிப்பன் கட்டிடத்தில் SDPI-ன் சென்னை மேயர் வேட்பாளர் S.அமீர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மற்றும் முஸ்லீம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் தலைவர் மேலை நாசர் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் ஈரோடு மாநகராட்சியின் SDPI வேட்பாளர் யூனுஸ் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.