கெய்ரோ: பெண்கள் கார் ஓட்டக் கூடாது என்ற தடையை மீறி கார் ஓட்டிய ஒரு சவூதி அரேபியப் பெண்ணுக்கு 10 கசையடிகள் தர அந்த நாட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சவூதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முஸ்லீம் நாடுகளிலேயே சவூதியில் மட்டுமே பெண்களுக்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் உள்ளன. கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக் கூடாது, ஆண் துணை இல்லாமல் வெளிநாடு போகக் கூடாது, வாக்குரிமை கிடையாது என பல கட்டுப்பாடுகள். இதில் வாக்குரிமைக்கு வழிவகுத்து சமீபத்தில் அந்த நாட்டு மன்னர் அப்துல்லா உத்தரவிட்டார்.
ஆனால் மன்னர் இந்த முடிவை எடுக்க முக்கியக் காரணம், கார் ஓட்டக் கூடாது என்ற தடையை அந்த நாட்டுப் பெண்கள் சிலர் மீற ஆரம்பித்ததுதான். கார் ஓட்டும் தடையை மீறி அந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணுரிமை அமைப்பினர் கார் ஓட்டத் தொடங்கினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி எச்சரித்து, இனிமேல் கார் ஓட்ட மாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வந்தனர்.
ஆனால் தற்போது முதல் முறையாக தடையை மீறி கார் ஓட்டிய ஒரு பெண்ணைக் கைது செய்து அப்பெண்ணுக்கு 10 கசையடி தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சவூதி பெண்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலக அளவிலும் இந்த தண்டனை பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.
பெண்களுக்கு வாக்குரிமை அளித்து மன்னர் உத்தரவிட்ட சில நாட்களிலேயே இப்படி ஒரு தண்டனையை அறிவித்திருப்பது சவூதி பெண்ணுரிமைவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
இந்த தண்டனை குறித்து சவூதியில் பிரபலமான பெண்ணுரிமைவாதியும், தேசிய மனித உரிமை அமைப்பின் உறுப்பினருமான சோஹிலா செயின் அல் அப்தின் தொலைபேசியில் கூறுகையில், இது மிகவும் கொடூரமான தண்டனை. இந்த தீர்ப்பு எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆனால் கடுமையான அரசு அரசாட்சியில் இதுபோன்ற தண்டனைகளை நாங்கள் எதிர்பார்த்ததுதான் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
தண்டனைக்குள்ளாகவுள்ள பெண்ணின் பெயர் ஷைமா ஜெஸ்டெய்னா. இவருக்கு வயது 30. அனுமதி இல்லாமல் கார் ஓட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. தன் மீதான தண்டனையை எதிர்த்து ஷைமா அப்பீல் செய்துள்ளதாக அவர் சார்பில் சமர் பதாவி என்பவர் கூறியுள்ளார்.
உலகிலேயே சவூதியில் மட்டுமே பெண்கள் கார் ஓட்டத் தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சவூதி பெண்கள் மட்டுமல்ல பிற நாட்டுப் பெண்களும் கூட இங்கு கார் ஓட்ட அனுமதி கிடையாது. இதனால் தங்களது தேவைகளுக்காக வெளி டிரைவர்களை நாடும் நிலையில் சவூதி பெண்கள் உள்ளனர். ஆனால் டிரைவர்களுக்கான குறைந்த பட்ச மாதச் சம்பளம் 400 டாலர் என்பதால் டிரைவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளவும் அவர்கள் தயங்குகின்றனர். இதனால் தங்களது உறவினர்களையே கார் ஓட்டச் சொல்லி கேட்டுக் கொள்ளும் பெண்கள் அங்கு அதிகம்.
குழந்தைகளை அழைத்து வர பள்ளி செல்ல, கடைகளுக்குப் போய் வர, டாக்டரிடம் போக என எதற்குமே அவர்களால் கார் ஓட்டிச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரசின் இந்த கடுமையான கெடுபிடிகள் குறித்து சோஹிலா மேலும் குமுறலுடன் கூறுகையில், நபிகள் நாயகத்தின் மனைவியர் கூட ஒட்டகம், குதிரைகள் ஆகியவற்றை ஓட்டியதாக குரான் கூறுகிறது. போக்குவரத்துக்கு அப்போது இருந்தவை அவை மட்டுமே. இந்தக் காலத்தில் வாகனங்கள் வந்து விட்ட நிலையில் அதை ஓட்டக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறார்.
கார் ஓட்டியதற்காக கசையடி தண்டனை தரப்பட்டுள்ளது உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.