நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 29 செப்டம்பர், 2011

இந்தோனேசியாவில் விமான விபத்தில் 18 பேர் பலி


ஜகார்தா - இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை குட்டி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 ஊழியர்கள், 15 பயணிகள் என 18 பேர் இருந்தனர்.   சுமத்ரா தீவில் அந்த குட்டி விமானம் தரை இறங்க வேண்டும். நடுவானில் அந்த விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது.
 
சிறிது நேரத்தில் அந்த விமானம் பகோராக் என்ற கிராமத்தில் தரையில் விழுந்தது. வேகமாக வந்து தரையில் மோதியதால் விமானம் பல துண்டுகளாக நொறுங்கி சிதறியது.
 
இந்த விமான விபத்தில், குட்டி விமானத்தில் இருந்த 18 பேரும் உயிரிழந்தனர். சிலரது உடல் அடையாளம் காண முடியாதபடி சிதைந்து விட்டது. விமான விபத்து குறித்து பகோராக் கிராம மக்கள் தகவல் கொடுத்த பிறகே அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனால் மீட்பு பணிகள் மிகவும் தாமதமாக தொடங்கின.
 
இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட ஒரு படகு விபத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அந்த சோகம் நீங்குவதற்குள் சிறு விமான விபத்தில் 18 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.