புதுடெல்லி - தகவல் அறியும் ஆர்வலரான எஸ்.சி. அகர்வால் கடந்த 3 ஆண்டில் மத்திய மந்திரிகளின் மேற் கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், அதற்கு ஆன செலவு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இது தொடர்பாக தலைமை தகவல் ஆணையர் சத்யானந்தா மிஸ்ராவுக்கு மனு அனுப்பினார்.
இதை தொடர்ந்து தகவல் ஆணைய அதிகாரிகள் அகர்வாலுக்கு அனுப்பியுள்ள விவரங்கள் வருமாறு:-
புள்ளி விவரம் இல்லை மத்திய மந்திரிகள் கடந்த 3 ஆண்டுகளில் மேற் கொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. பல்வேறு அமைச்சகங்கள் சம்பந்தப்பட்டது என்பதால், முழு விவரங்களும் உடனடியாக கிடைக்கப் பெறவில்லை.
நிதி அமைச்சகம் மட்டும் ஒரு ஆண்டிற்கான செலவு விவரங்களை அளித்துள்ளது. ரூ. 42 கோடி கடந்த 2010-11 நிதியாண்டில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட வகையில் கேபினட் மந்திரிகளுக்கு ரூ.37.16 கோடியும், இணை மந்திரிகளுக்கு ரூ. 4.76 கோடியும் செலவிடப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு மத்திய தகவல் ஆணையம் பதில் அளித்துள்ளது.